முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, February 4, 2015

கீழக்கரை வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள்

No comments :
விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் திரு. தொல் திருமாவளவன் மற்றும் ஆளூர் ஷா நவாஸ் கீழக்கரை வருகை தந்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹஸன் அலி, கீழக்கரை கவுன்சிலர் திரு. முகைதீன் இப்ராஹீம் மற்றும் பலர் வரவேற்றனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்கள் தற்கால அரசியல் சூல்நிலைகளையும், சமூக பிரச்சனைகளையும் கலந்தாலோசித்தனர்.

செய்தி; கீழக்கரை நகர் நல இயக்கம்

குவைத்தில் நடைபெற்ற ஏழைகளுக்கான ஆடைகள் சேகரிப்பு முகாம்

No comments :
குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக 'ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்' உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்புமுகாமை சென்ற வெள்ளிக்கிழமை (30/01/2015) அன்று குவைத் தமிழ் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது. 

குறுகிய கால அவகாசம் தரப்பட்டாலும் சுமார் 1 டன் (ஆயிரம் கிலோ) ஆடைகளை மக்கள் அன்பளிப்பாக அள்ளி வழங்கினர். அவற்றை சேகரித்து குவைத்தில் இயங்கும் பூப்யான் வங்கி (Boubyan Bank) துணையுடன் ஒரே நாளில்56,000 கிலோ (56 டன்) ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்த வளைகுடா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குவைத் (Gulf University for Science & Technology, Kuwait) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.ஆடைகளை அள்ளி வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆடைகளை சேகரித்து அல்லல்படும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வோம் என்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


இதற்கு முன் பல்வேறு காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கபட்ட திருப்பூர், முஸாஃபர் நகர், ஜம்மு & காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உதவித் தொகைகளை இச்சங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: திரு. கலீல் அஹமது, மேலப்பாளையம்.

கீழக்கரை அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்தவர் கைது

No comments :
கீழக்கரை தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்(28). இவரது மனைவி பிரியா பிரசவத்துக்காக, கீழக்கரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். 


அறுவை சிகிச்சை மூலம் பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்
, செவ்வாய்க்கிழமை தனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்யுமாறு அலெக்ஸ்பாண்டியன் மருத்துவரிடம் வற்புறுத்தியுள்ளார். மருத்துவர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டியன், மருத்துவமனை கண்ணாடியை உடைத்துள்ளார்.
 
இதுகுறித்து தலைமை மருத்துவர் ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர்.

செய்தி: தினகரன்

ராமேசுவரம் கோயிலில் தைப்பூசத்திருவிழா

No comments :
ராமேசுவரம் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா லெட்சுமணேஸ்வரர் தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள்
, தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன. 


மாலை 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றது

துபை யில் புதிய கடை திறப்பு - SIAJ General Trading

No comments :பிப்ரவரி 5ம் தேதி, வெள்ளிக்கிழமை, துபை, ஹோர் அல் அன்ஸ் பகுதியில் , கீழக்கரையைச்சார்ந்த ஜனாப். ஜமீல் அவர்களின் புதிய கடை திறப்பு விழா நடக்கவிருக்கிறது.

அனைவரும் வருக என அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.