முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 14, 2022

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

சிறுபான்மை மாணவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வி ஆண்டில் 1-ம் முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

அதேபோல 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட படிப்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


மேலும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

இதற்கான கால அவகாசம் இந்த மாதம் 15 மற்றும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும்,

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு 30-ந்தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

 

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, November 7, 2022

இராமநாதபுரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வுகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 பணி காலி இடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்று தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

 


டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை), 17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும்

2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022 (புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை)

 

ஆகிய நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

மாதிரி தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விபரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேக்கம், தரமான சாலை அமைக்க கோரிக்கை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

 


கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

 

கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

செய்தி: மாலை மலர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.