Friday, March 10, 2023
கீழக்கரையில் மார்ச் 11-12 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை சதக்கல்வி குழுமங்கள் மற்றும் நடிகர் விஐய் சேதுபதியின் வள்ளலார்
வேலைவாய்ப்பு சேவை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங்
கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாளை
(11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள இந்த முகாமில் தலைசிறந்த 150-க்கும்
மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர் தேவைக்காக சுமார் 15 ஆயிரம் பேரை தேர்வு
செய்ய உள்ளன.
10-ம்
வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் மேலாண்மைதுறை, எம்.பி.ஏ,
கணினி அறிவியல், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் படித்த அனைவரும் இந்த மாபெரும்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த வேலைவாய்ப்பினை
பெற்று பயன்அடையலாம்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள http://jobfair.vvvsi.com என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு இலவசம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று முகமது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் முகமது யூசுப் சாஹிப், இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் தெரிவித்தனர்
Friday, March 3, 2023
கீழக்கரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த அமைச்சரிடம் மனு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைப்ப தற்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை, காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த
மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த நிலையில் கீழக்கரை சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவத்துக்கு இங்கு வந்து சென்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோதே பணியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது.
எனவே ஆஸ்பத்திரியை
மேம்படுத்தி புதிய கட்டிடம் அமைத்து தரவும், தளவாடப்பொருட்கள் மற்றும் படுக்கை வசதிகளை
அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த
மனு வில் குறிப்பிட்டுள்ளது.