முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 31, 2018

காவிரி குடிநீர் குழாய் உடைப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் பொதுமக்களின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்துவருகிறது. இதற்காக சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் சீராக வினியோகம் செய்ய கிராம பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டு உள்ளன. குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள்குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. சில இடங்களில் பொதுமக்களே குழாயில் துளையிட்டு தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மண்டபம்வழுதூர்பார்த்திபனூர்முதுகுளத்தூர்பரமக்குடிநயினார்கோவில்கொடிகுளம்சக்கரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாவது வழக்கமாக உள்ளது. இதுதவிர சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல்ஊருணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் தொட்டியின் அருகிலேயே குளிப்பதுதுணிகளை துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.




இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. ஏற்கனவே காவிரிகூட்டுக் குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராம பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது.

ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளில் 3 நாள் முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிஉள்ளது.

மாவட்டத்தில் குழாய்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாளையொட்டி ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!!

No comments :
ராமநாதபுரத்தில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாளையொட்டி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 259 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- 

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.03.1760 அன்று பிறந்தார்.  குழந்தைப் பருவத்திலேயே ராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு எண்ணிலடங்காத அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டார். இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவர். அன்றைய காலகட்டத்தில் ராமநாதபுரம் சீமையில் அதிகளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டுமென்ற ஆணையினை துச்சமென நினைத்து கப்பம் கட்ட மறுத்தவர். 

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும், வணிகங்களையும் எதிர்த்து போராடிய மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியை  அன்றைய ஆங்கிலேய அரசு கட்டுப்படுத்திட எண்ணி, அவர் 12வயதாக இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர் படை ராமநாதபுரம் கோட்டையினை சுற்றி வளைத்து போரிட்டது.  இப்போரில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சியிலுள்ள கோட்டையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சிறையில் கழித்தார். 1782ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றார். சிறிது காலம் பொறுமையாக இருந்த மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் தனது உள்ளத்தில் ஊறிய சுதேசி சிந்தனையின் காரணமாக மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி முடக்கினார். இதன் காரணமாக 1795-ஆம் ஆண்டு வெள்ளையர் மற்றும் நவாப்புகளின் கூட்டுப்படை மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் மீண்டும் கைது செய்து திருச்சிக் கோட்டையில் சிறை அடைத்தது. திருச்சி சிறையில் சில நாட்கள், அதன்பின்பு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி 23.01.1809 அன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் உயிர் நீத்தார்.

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கொளரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது  பிறந்த நாளான மார்ச் 30-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக நுழைவுவாயில் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 8 அடி உயர வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை கடந்த 08.02.2016 அன்று முன்னாள் தமிழ்நாடு  முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக்காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்கள்.  மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி  அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அன்னாரின் வாரிசுதாரர்கள் 75 நபர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6500ஃ- வீதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிப்பது நமது கடமையாகும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.37லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களும், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பாக திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.30லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலும், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.2லட்சத்து 59ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.84லட்சத்து 80ஆயிரத்து 406 மதிப்பில் மானிய விலையில் பண்ணை கருவிகள் என மொத்தம் 259 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் இத்தகைய அரசு நலத்திட்ட உதவிகளை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மன்னர்.திரு.என்.குமரன் சேதுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  இந்திராகாந்தி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தணித்துணை ஆட்சியர் ஆ.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, அரசு அலுவலர்கள் , மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் வாரிசுதாரர்கள் , பயனாளிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, March 25, 2018

புதிதாக அமைக்கப்பட்ட மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு; மற்றுமொரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா?!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது. 

மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ராமநாதபுரம் வழியாக குறுக்குச் சாலையில் செல்லும் வகையில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இச்சாலையானது, ராமநாதபுரம் நகருக்குள் செல்லாமல், அருகேயுள்ள அச்சுந்தன்வயல் கிராமத்திலிருந்து தொடங்கி பட்டணம்காத்தான் வரை சுற்றுச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. 

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், கனரக வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சாலை வழியாக சென்று வருகின்றன. 

இந்நிலையில், இந்த சுற்றுச்சாலைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மைல் கற்கள் பலவற்றில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிட்ட ஊர்களுக்கான கி.மீ. தொலைவு எழுதப்பட்டுள்ளது. இம் மைல் கற்களில் ஹிந்தியிலும் அந்தந்த ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இவற்றை சிலர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானிலிருந்து சத்திரக்குடி வரையிலான சுற்றுச்சாலைப் பகுதியான சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மைல் கற்களில் மதுரை, பரமக்குடி, ராமேசுவரம் என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. 

மேலும், அம் மைல்கற்களின் மீது தமிழ் மண் எனவும் எழுதியுள்ளனர். இதனால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே, இச்செயலில் ஈடுபடுவர்களை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி!!

No comments :
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பேக்கரும்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளது. இங்கு, தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்லுகின்றனர். இங்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேக்கரும்பு பேருந்து நிறுத்மம் அருகே 4 கழிப்பறைகள் கட்டப்பட்டன.


ஆனால், தற்போது இந்த கழிப்பறைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டப்பட்டுள்ளன. இதனால், கலாம் தேசிய நினைவிடத்துக்கு வரும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.


எனவே, இந்த கழிப்பறைகளை முறையாகப் பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவேண்டும் என்பதுடன், இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் கூடுதலாக சில கழிப்பறைகளும் கட்டப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குழந்தை தொழிலாளர் மீட்பு சேவை எண்-1098 விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

No comments :
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர் மீட்பு குறித்த விழிப்புணர்வு அவசர இலவச தொலைபேசி சேவை எண்-1098 வில்லைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தலைமை வகித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கலாவதி, சைல்டு-லைன் இயக்குநர்கள் கே. கருப்புச்சாமி, தேவராஜ், ஆட்டோ சங்கத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பி. மாணிக்கம், மகளிர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி எண்-1098 வாசகம் பொறித்த வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களிடம் வழங்கியும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.


இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் துறை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, March 22, 2018

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு; ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு!!

No comments :
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, ராமநாதபுரம் சுரேஷ் அகாதெமியில் இலவச உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அதன் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் செயல்பட்டு வரும் சுரேஷ் அகாதெமியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23), தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வை இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சீருடைப் பணியில் 6,140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த இலவச உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி: திரு. தாஹீர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்!!

No comments :
ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரமற்ற பணிகளால் கழிப்பறைகள் சேதமடைந்தும், செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.  பணியாளர்கள் அடிப்பபடை தேவைகளுக்கு திண்டாடும் நிலைதான் உள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 கோடி ரூபாயில் புதிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம், கட்டப்பட்டு 2016 பிப்.2 ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., 27.2.2016ல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனாலும், 2017 இறுதி வரை இந்த கட்டடத்தின் பணிகள் நிறைவடையவில்லை.

கட்டடப்பணிகளை செய்த பொதுப்பணித்துறையினர் இப்பணிகளில் சுணக்கம் காட்டினர். மின் சாதனங்கள் பொருத்த வேண்டும். மேஜை, நாற்காலிகள், அறைகலன்கள் பொருத்த வேண்டும், எனக்கூறி அவ்வப்போது வேலை செய்து வந்தனர். 2018 துவக்கத்தில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் கடந்த வாரம் தான் இங்கே மாற்றப்பட்டது. இருந்தாலும், இன்னும் சில வேலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், அலுவலகங்கள் செயல்படத் துவங்கி நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கழிப்பறைகள் பல சேதமடைந்துவிட்டன. கதவுகள் உடைந்துள்ளன. முதல் தளம், இரண்டாம் தளம் கழிப்பறைகளில் இருந்து கட்டடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அந்த தண்ணீர் கீழ் அறையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மேல்
  விழுகிறது.
மேலும், கட்டடத்தில் புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் தேவைக்கு காவிரி குடிநீர் இணைப்பும் இல்லை. இங்குள்ள நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்கும், பணியாளர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.


பின் பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் நிறைந்து வெளியேறியதால் குளம் போல் தேங்கி நோய்பரப்பி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவின் தரமற்ற கட்டுமானப்பணியால் விரைவில் கட்டடம் உறுதித் தன்மை இழக்கும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவிததனர்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மாற்றப்பட கள்ள நோட்டுக்கள்!!

No comments :
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாயை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை முந்திக்கொண்டு மாற்றி வந்தனர்.

இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு ராமநாதபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்கள் கொடுத்த 500,1000 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சில ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.




ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்பிய 1000 ரூபாய் நோட்டு களில் 5 கள்ளநோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ரவீந்திரன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த கள்ளநோட்டு கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டதா அல்லது திட்டமிட்டே கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளாக சமூக விரோதிகள் மாற்றினார்களா என்பது தெரியவில்லை. இந்த நோட்டுகளை மாற்றி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்பதாலும், நோட்டுகளை மாற்றியவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாததாலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!!

No comments :
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாடானை தாலுகா செயலாளர் குருசாமி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசும்மாவட்ட நிர்வாகமும் பெரிய கண்மாயை அளவை செய்து சர்வே கற்கள் ஊன்ற முடிவெடுத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த கண்மாயின் அளவை சர்வே செய்யும் போது 1967-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் சர்வே செய்ய வேண்டும். மேலும் கண்மாயில் நீர் பிடிப்பு பகுதி வரை பட்டா வழங்கப்பட்டுஉள்ளது. இதனால் பலர் பண்ணை குட்டைகள்ஊருணிகள் வெட்டி கண்மாய்க்குள் தண்ணீர் வராத அளவில் செய்துள்ளனர். எனவே கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பட்டாவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்றவேண்டும்.




மேலும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து வரும் 4 கால்வாய்களில் தற்போது 2 கால்வாய்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதில் சூரியன்கோட்டை கால்வாய், சருகணி மணிமுத்தாறு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு முன்பு போல் தண்ணீர் வரத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, March 20, 2018

கீழக்கரை அருகே வாகன விபத்து; 27 பேர் காயம்!!

No comments :
கீழக்கரை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் மினி சரக்கு வாகனம், திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ரைஸ்மில் காலனியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மினிசரக்கு வாகனத்தில் கீழக்கரையில் நடந்த திருமண நாள் குறிக்கும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பினர். இவர்கள் சென்ற வாகனம் கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், மினி சரக்கு வாகனத்தில் பயணம் செய்த கல்பனா, அமராவதி,பிச்சைமுத்து, சின்னப்பொண்ணு ஆகியோர் உள்பட 9 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும், சுமதி, புஷ்பவள்ளி, முத்துமாரி, நாகவள்ளி, முத்துக்கனி ஆகியோர் உள்பட 18 பேர் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், உடனடியாக தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அரசு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். அப்போது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், எலும்பு முறிவு மருத்துவர் மனோஜ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மென்னந்தி நாகரெத்தினம், முருகன், சந்தோஷ், தஞ்சாவூர் தம்பிகோட்டை ரவி, திருவாரூர் மேலமருதூர் மதிவாணன், சிவகாசி பிரகாஷ், ராமநாதபுரம் காரான் கவாஸ்கரன், தூத்துக்குடி வீரபாண்டியபுரம் ஹரிகரன் ஆகியோர் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 


திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கு மேதலோடையை சேர்ந்த காந்தி மகன் முனியராஜ், அங்குச்சாமி மகன் ராஜ்குமார் ஆகியோர் இலங்கை கண்டியில் உள்ள ஏஜெண்டு அசன்பாய் என்பவரின் மூலம் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக தெரிவித்தனர். செர்ஜியா நாட்டில் தோட்ட வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் மாதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் என்றும், அதற்காக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இவர்களின் பேச்சை நம்பி தலா ரூ.5 லட்சம் பணத்தினை அவர்கள் இருவர் மூலம் இலங்கை ஏஜெண்டு அசன்பாய் என்பவரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் வைத்து கொடுத்தோம்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் எங்களை கடந்த மாதம் 17-ந்தேதி சென்னைக்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு மர்தானா என்ற பகுதியில் விடுதி ஒன்றில் தங்க வைத்த பின்னர் எங்களிடம் இலங்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் செர்ஜியாவிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். நாங்களும் அதனை நம்பி விடுதியில் தங்கியிருந்தோம். 5 நாட்கள் கழித்து வந்த அவர்கள் ரூ.5,000 இலங்கை பணத்தினை கொடுத்து சாப்பாடு செலவிற்கு வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் செய்வதறியாது திகைத்து போனோம்.

எப்படியும் வந்துவிடுவார்கள் என்று ஒருமாதம் வரை காத்திருந்தோம். ஆனால், அவர்கள் வராததால் நாங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விடுதி கட்டணம் மற்றும் விமான கட்டணத்திற்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் அனுப்ப சொல்லி அது வந்ததும் விடுதியை காலி செய்து ராமநாதபுரம் வந்துள்ளோம். வெளிநாட்டு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 8 பேரிடமும் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தினை திரும்ப பெற்றுத்தர வேண்டும். எங்களை போன்று மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 19, 2018

ராமநாதபுரம் நகரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!!

1 comment :
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ரோமன்சர்ச் பகுதிக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ரோமன் சர்ச் பகுதியில் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படு கிறது. இந்தநிலையில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.முதல் ரூ.10 கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக தனியார் லாரிகளும் வரவில்லை. தண்ணீர் எடுத்துவரும் பகுதியில் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளதால் தண்ணீர் எடுக்க முடியவில்லை என்று கூறி தனியார் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் லாரியும் வரவில்லை.

காவிரி தண்ணீர், தனியார் லாரி எதுவும் கிடைக்காததால் நாங்கள் அனைவரும் குடிநீருக்காக சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மார்ச் 26 ல் ராமநாதபுரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் மார்ச் 26 ல் நடக்கவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார் தாலுகாக்களில் காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்காக குறை தீர்க்கும் கூட்டம் நடக்கவுள்ளது. 

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மார்ச் 26 மாலை 5:15 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் முகவர்கள் பங்கேற்கின்றனர்.


காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாட்டிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. தமிழகத்திலேயே தனுஷ்கோடி பகுதியில்தான் காற்றின் வேகம் எல்லா சீசனிலும் அதிகமாக இருக்கும். கம்பிபாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் ராட்சத டவர் ஒன்று அமைக்கப்பட்டு கடந்த வருடங்களுக்கும் மேலாகவே காற்றின் தன்மை மற்றம் வேகம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் காற்றாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறையின் இணை செயலாளர் பானு பிரதாப் யாதவ்வருகை தந்தார். கம்பிப்பாடுஅரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் காற்றின் வேகத்தை கணக்கிடுவதற்காக வைக்கப் பட்டுள்ள கோபுரத்தை பார்வையிட்டதுடன்அரிச்சல்முனை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனுஷ்கோடி கடலில் காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு காற்றாலை அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில்தான் காற்றாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.300 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 5 இடங்களில் காற்றாலைகளை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதை இலக்காக வைத்துள்ளோம். கடலில் காற்றாலை அமைப்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே மத்திய அரசால் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, March 18, 2018

துபாயில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி!!

No comments :
துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் பிரச்சனைகள், குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகள், ஆதார் அட்டை விளக்கம், வாட் வரி தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம்!!

2 comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பரமக்குடி நத்தம் நிலவரி திட்டம் தனி தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த முத்து லெட்சுமி கடலாடி தாசில்தராகவும்அந்த இடத்தில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி கீழக்கரை தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த கணேசன் திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.

திருவாடானையில் பணியாற்றி வந்த காளிமுத்தன் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனிதாசில்தாராகவும்பரமசிவன் பரமக்குடி தாசில்தாராகவும்அங்கு பணியாற்றி வந்த ஜெயமணி பரமக்குடி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்சுகுமாறன் ராமநாதபுரம் டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் சிக்கந்தர் பபிதா பரமக்குடி நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் லெட்சுமணன் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், உப்பூர் அனல்மின் நிலைய முன்னாள் தனி தாசில்தார் மீனாட்சி முதுகுளத்தூர் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கோபால் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அந்த இடத்தில் பணியாற்றிய சிவகுமார் ராமநாதபுரம் தாசில்தாராகவும், ராமநாதபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும், நித்தியானந்தம் மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் கலைமதி புதிதாக தோற்று விக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வராஜ் பரமக்குடி நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ராமநாதபும் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் சந்திரன் ராமேசுவரம் தாசில்தாராகவும், ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் காமாட்சி ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளர் சுரேஷ்குமார் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், முதுகுளத்தூர் மண்டல துணை தாசில்தார் மரகதமேரி முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தனித்துணை தாசில்தார் பாலசரவணன் உப்பூர் அனல்மின் நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த கல்யாண குமார் ராமநாதபுரம் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், திருவாடானை மண்டல துணை தாசில்தார் சாந்தி ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)