முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 18, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.

 

இந்த உதவி மையத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

இந்த மருத்துவ குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089 25833 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, April 7, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பு காமிரா வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளின் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

 


வாக்கு பதிவு முடிந்த நிலையில், ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் 4 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் தீத்தடுப்பு சாதனங்களும் உள்ளன என்றார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,547 மையங்களலும் இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அவைகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணி விடிய, விடிய நடைபெற்றது. ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவைகள் கொண்டு செல்லப்பட்டன.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.24 சதவீதம் வாக்குபதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

 

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி பரமக்குடியில் 38.78 சதவீதமும், திருவாடானையில் 38.70 சதவீதமும், ராமநாதபுரத்தில் 36.09 சதவீதமும், முதுகுளத்தூரில் சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 37.43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

 


மாலை 5 மணி நிலவரப்படி பரமக்குடியில் 62.23 சதவீதமும், திருவாடானையில் 62.30 சதவீதமும், ராமநாதபுரத்தில் 50.04 சதவீதமும், முதுகுளத்தூரில் 58.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 51.27 சதவீதமும் பேர் வாக்களித்திருந்தனர்.

 

இரவு 7 மணி நிலவரப்படி

பரமக்குடி தொகுதியில் 70.51 சதவீதம்,

திருவாடானை தொகுதியில் 68.75 சதவீதம்,

ராமநாதபுரம் தொகுதியில் 67.51 சதவீதம்,

முதுகுளத்தூர் தொகுதியில் 70.35 சதவீதம்

 

என மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 3 லட்சத்து 76697 ஆண்களும், 4 லட்சத்து 29,999 பெண்களும் என மொத்தம் 8,05,701 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 5 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, April 4, 2021

உதய சூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் தி.மு.க காதர்பாட்சா முத்து ராமலிங்கம்!!

No comments :

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 3-ம் கட்டமாக பாம்பன், தங்கச்சி மடம், மரைக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோ வலசை உள்பட பல கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற் கொண்டார். ஊர் பிரமு கர்கள் மற்றும் இளைஞர்கள் அவரை கிராமத் திற்குள் குதிரையில் அழைத்து சென்று வரவேற்பளித்தனர். கிராம பகுதியில் விளை யாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து காதர்பாட்சா முத்துராம லிங்கம் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். பல கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணி யாக சென்று வாக்கு சேகரித்தார். 

 


வாக்காளர்கள் மத்தியில் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:- 

 

தமிழகம் தலை நிமிர, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க,அனைவரும் பிரிவினை இன்றி சம உரிமையுடன் சமத்துவமாக வாழ, அனைத்து துறை களிலும் பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க தலைவர் ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழினம் காப்பாற்றப்படும் என்பதை ஒவ்வொரு வாக் களரும் மனதில் வைத்து வரும் 6ந் தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் மானத்தை, சுயமரியா தையை,  அடிப்படை உரிமைகளை காக்க, தமிழ் மொழி, கலாச்சாரம், பண் பாட்டை காக்க மவுன புரட்சி நடத்தி  தி.மு.க. வை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்பது செல்லும் இடமெல்லாம் மக்களின் உணர்வுகளில் தெரிகிறது.

 

அதேபோல ராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  என்னை வெற்றி பெறச் செய்யுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தனுஷ்கோடி தென் கடலில் தூண்டில் வளைவு துறைமுகம், மீனவகிராமங் களில் சமுதாய கூடங்கள், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, தடையற்ற மின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறை வேற்றித்தர உறுதி கூறுகிறேன்.காவிரி குடிநீர் அனைத்து பகுதிக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் மற்றும் சுயஉதவி குழுவி னருக்கு அரசின் நிதி மற்றும் கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனை வரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசி னார். அவருடன் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக உடன் சென்றனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, March 29, 2021

வாலிநோக்கத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி!!

No comments :

வாலிநோக்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் 4ம் மற்றும் 5ம் இடங்கள் பெற்றன.

 


4ம் பரிசாக பழநிபாபா மாணவர்கல் அணிக்கு ரூ.8000/- மற்றும் கோப்பையும்

5ம் பரிசாக JVC அணிக்கு ரூ.5000/- மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

 

வீரர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

 

தகவல்; ஹமீது ராஜா, கீழை


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, March 21, 2021

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 23 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!!

No comments :

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

 

இதில் 15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக, திமுக, அமமுக உள்ளிட்ட பிரதானக்கட்சிகள் உள்பட 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 


வேட்பு மனுக்களின் பரிசீலனையானது சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத் தேர்தல் பார்வையாளர் சொரப்பாபு தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலரான சார்-ஆட்சியர் என்.சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்றது.

 

மனுக்கள் பரிசீலனைக்கு திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் து.குப்புராம், அமமுக வேட்பாளர் ஜி.முனியசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்.இளங்கோ , மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணன் மற்றும் அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ராமநாதபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு முதலில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அதன்பின் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பாஜக வழக்குரைஞர்கள் தரப்பில் கூட்டுறவு சங்க முறைகேடு புகார் தொடர்பாக திமுக வேட்பாளர் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர்.

 

அதற்கு திமுக வழக்குரைஞர்கள் சார்பில் விளக்கம் அளித்தனர். இருதரப்பையும் கேட்ட சார்-ஆட்சியர், திமுக வேட்பாளர் மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார். உடனே திமுகவினர் கைதட்டி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 23 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, March 16, 2021

திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்!!

No comments :

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

 

முன்னதாக அவர் திறந்த ஜீப்பில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்டோருடன் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அவர்கள் வந்த வாகனங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் கி. வெள்ளத்துரை. நகர் காவல் ஆய்வாளர் சரவணசேதுபாண்டிராயர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறித்தனர்.

அவர்களில் சிலர் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 


பின்னர் வேட்பாளர், மாற்று வேட்பாளர் மற்றும் இருவர் என 4 பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். இதன் பின் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரானா சார்- ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ராவிடம் மனு தாக்கல் செய்தார். பிறகு மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், மனு தாக்கல் செய்தார்.

மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், திமுக வேட்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சகோதரர் ஆவார்.

 

அப்போது காதர்பாட்சா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும் போது.

 

தேர்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் வருகிறார் என்றார். சொத்துக்கணக்கை காட்டவில்லை: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் சொத்துக் கணக்கை காட்டவில்லை என தேர்தல் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான கடைசி தேதியான வரும் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, March 9, 2021

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுபதிவு இயந்திரங்கள்அனுப்பி வைப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிவாரியாக அனுப்பிவைக்க, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் முறை ஒதுக்கீடு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது:

பரமக்குடி -357,

திருவாடானை- 417,

ராமநாதபுரம்- 431,

முதுகுளத்துார்- 442

என மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்நிலை பரிசோதனை முடிந்து 3206 ஓட்டளிக்கும் இயந்திரங்கள், 1966 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்க கூடிய 2232 இயந்திரங்கள்பாதுகாப்பு அறையில் உள்ளன.

 

 

இவை தேர்தல்ஆணையம் அறிவித்த கணக்கீட்டின் படி கம்ப்யூட்டர் முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு 30 சதவீதம் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு உடன் சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்,' எனக் கூறினார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள்!!

1 comment :

 

அரசு போக்குவரத்து கழகங்களில் மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 10 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் கோட்டம் ராமேஸ்வரம் கிளையில் இருந்து மதுரைக்கு மூன்று 'ஏசி' பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 1 டூ 1 பஸ் ஒன்றும், ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை, துாத்துக்குடிக்கு தலா ஒரு பஸ் இயக்கப்படுகிறது. 

 

இதே போல் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரு பஸ், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு பஸ் உட்பட மாவட்டத்திற்குள் பத்து 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகமாக உள்ளது.

 

கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும், நீண்ட துார பயணத்தை 'ஏசி' பஸ்சில் செல்ல விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பயணிகளின் வரவேற்பை பொறுத்து 'ஏசி' பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என அவர்கள் தெரிவித்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, March 8, 2021

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மூத்த அண்ணன்காலமானார்!!

No comments :

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மூத்த அண்ணன் முகமது முத்துமீரா மரைக்காயர்104, உடல் நலக்குறைவால் காலமானார்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் வசித்த அவரது அண்ணன், உடல் நலக்குறைவால் வீட்டில் ஒய்வில் இருந்த நிலையில், நேற்று இரவு 8:00 மணிக்கு உயிரிழந்தார். இவரது மனைவி அகமது கனிஅம்மாள் 1994ல் உயிரிழந்தார். இவர்களுக்கு இரு மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.இவரது உடல் இன்று (மார்ச் 8) வீடு முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. 

பின் மாலை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நல்லடக்கம் நடக்க உள்ளது.(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, March 4, 2021

தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு!!

No comments :

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), 
திருவாடானை,
ராமநாதபுரம் மற்றும்
முதுகுளத்தூர்

சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை கண்காணித்திட ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

அதில், தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை 

1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 

1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் 

என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, February 28, 2021

ராமேசுவரத்தில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியை முதல்வர் திறந்துவைத்தார்!!

No comments :

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 

 ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.31 கோடியில் பேருந்து நிலையம் எதிரே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் யாத்ரி நிவாஸ் என்ற தங்கும் விடுதி கட்டும் பணி நிறைவடைந்தது.

 


இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் மொத்தம் 136 அறைகள் உள்ளன. இதுதவிர 100-க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தும் இடமும், 10-க்கும் மேற்பட்ட கடையுடன் வணிக வளாக வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் யாத்ரி நிவாஸ் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, February 11, 2021

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு ஆகஸ்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும், என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

 

 

சுகாதாரத்துறையில் நடைபெற்று வரும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் கட்டமைப்பு, சிகிச்சை பிரிவுகளில் வசதிகள், தேவைகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷில்பா, அஜய் யாதவ், எஸ்.நடராஜன், சிவஞானம், டீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


 

இவர்களில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலரான எஸ்.நடராஜன் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று அவர் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது: கட்டடப்பணிகள் 48 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

 

 

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.பணிகள் நிலைமை குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வேன். மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, February 7, 2021

மார்ச் மாதம் முதல் மதுரை - ராமேஸ்வரம் பயணிகல் ரயில்!!

No comments :

மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.

 


மதுரையிலிருந்து பயணிகள் ரயில் தினமும் காலை 5.25 மணிக்கு ராமேசுவரம் நோக்கி புறப்படும். அதேநேரத்தில் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020 ஏப்ரல் முதல் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

தற்போது, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கும், திருச்சிக்கும் மட்டுமே தினமும் இரு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன.

 

இது குறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் தெரிவித்தது:

 

மார்ச் முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், மாலையில் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக, தண்டவாளம் கண்காணிப்பு, ஊழியர்கள் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.

 

செய்தி; தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரையில் மாமியாரை கொன்றதாக மருமகன் கைது!!

No comments :


கீழக்கரையில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றதாக மருமகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாய்கரவாடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி பொன்னம்மாள் (70). இவர்களது மகள் ராமலட்சுமியை, கீழக்கரை லட்சுமிபுரம் இடிந்தகல்புதூரைச் சேர்ந்த மீனவர் முருகன் (39) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

 


இந்நிலையில், முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தனது மகளுக்கு துணையாக இரவில் அவரது வீட்டில் பொன்னம்மாள் தூங்கிவந்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில், முருகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அதை தடுக்கச் சென்ற பொன்னம்மாளை கத்தியால் முருகன் குத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

 

இது குறித்து ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி டாக்டரிடம் ரூ.1.29 லட்சம் மோசடி!!

No comments :

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் ரூ.11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் ஸ்டேபனோ ஜோனதனிடம் 34, ரூ.1.29 லட்சத்தை ஏமாற்றிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


ராமநாதபுரம் பட்டணம்காத்தானைச் சேர்ந்த இவர் தாமரைக்குளம் ஆரம்ப சுகாதாரநிலையத் தில் பணிபுரிகிறார். இவரது அலைபேசிக்கு ஜன., 27 ல் ஒரு அழைப்பு வந்தது. அதில் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ரூ. 11 லட்சம் பரிசு வென்றுள்ளதாக கூறினர். இது சம்பந்தமாக 09903617242 என்ற எண்ணில் பேசுமாறு கூறியுள்ளனர்.அந்த எண்ணில் பேசியபோது வரி மற்றும் பரிமாற்ற கட்டணங்களாக ரூ.1,29,300 செலுத்த கூறினர். அவர்கள் கூறியபடி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியும் பரிசுத்தொகை வரவில்லை.தனக்கு பரிசுதொகை வேண்டாம் பணத்தை திரும்பத்தர டாக்டர் பேசியுள்ளார். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. பின்னர் அலைபேசி சுவிச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. டாக்டரின் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.

 செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 2, 2021

முகநூலில் அவதூறு பதிவிட்ட வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் நாடார் தெருவை சேர்ந்த மேலமான்குண்டு பாண்டி மகன் வினோத் (31) என்பவரும் 29 வயது பெண்ணும் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள திருமண தகவல் மையத்தில் வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் பற்றி வினோத்  தவறான தகவலை தெரிவித்தாராம். இதுபற்றி அறிந்த அந்த பெண் மற்றும் அவரின் தாய் ஆகியோர் வினோத்திடம் சென்று கேட்டுள்ளனர். அவர்களை வினோத் செல்போனில் படம் எடுத்துள்ளார். 
இதனை கண்ட அவர்கள் ஏன் படம் எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் பேசமால் இருந்ததால் கண்டித்துவிட்டு தாயும் மகளும் வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். இந்தநிலையில் இருவரின் படத்தினையும் முகநூலில் பதிவு செய்த வினோத் செல்போன் பறிக்கும் பெண்கள் என பதிவு செய்துவிட்டாராம். இதுகுறித்து வினோத்திடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, January 28, 2021

இளையான்குடியில் நடந்த கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் (MYFA & JVC) பரிசுகள் வென்றன!!

No comments :
இளையான்குடி புதூர் ஜிம்கானா க்ளப் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் வென்றன.

கீழக்கரை MYFA க்ளப் - ரூ.20,000/- மற்றும் கோப்பை (மூன்றாம்)
கீழக்கரை JVC க்ளப் - ரூ.15,000/- மற்றும் கோப்பை (நான்காம்)செய்தி;: ஹமீது ராஜா, கீழக்கரை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, January 19, 2021

அரியமான் கடற்கரையில் ஜன. 23லம் தேதி விளையாட்டு திருவிழா!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியமான் கடற்கரையில்ஜன. 23ல் விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.

 

விழாவில் ஆடவர்களுக்கான கால்பந்து, வாலிபால் போட்டி நடக்கிறது.

வாலிபால் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 6 ஆயிரம், இரண்டாவது ரூ.4 ஆயிரம், மூன்றாமிடம் ரூ. 2ஆயிரமும்,

கால்பந்து போட்டியில் முதலிடம் ரூ.15ஆயிரம், இரண்டாமிடம் ரூ. 10ஆயிரம், மூன்றாமிடம் ரூ.5ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

 

இப்போட்டிகளில் பங்கேற்ற தகுதி சுற்றுத் தேர்வு ஜன.,22 அரியமான் கடற்கரையில் நடைபெற உள்ளது.

 


 

விருப்பமுள்ள அணிகள் ஆதார் அட்டை,பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொண்டு வர வேண்டும்.

தேர்வாகும் அணிகள் ஜன.,23ல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு வாலிபால் போட்டிக்கு

ரமேஷ்பாபு - 81482 59600,

கால்பந்து - குலசேகரபாண்டியன் - 94437 83327,

மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர்- 74017 03509

தொடர்பு கொள்ளலாம்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, January 10, 2021

மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க கோரிக்கை!!

No comments :

தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க Ayush welfare organization முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது சம்பந்தமான கோரிக்கை விபரம்:

பொதுவாக அனைவருக்கும் நல வாழ்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ முறைகளில் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறையாக அமைவதே சாலச்சிறந்தது.

 

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 2005 மற்றும் தேசிய நகர்புற சுகாதார திட்டம் 2013 இவற்றை உள்ளடக்கிய தேசிய நலவாழ்வு இயக்கம் 2015 மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் நோய் தடுப்புக்கு மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்கு விரிவான கருத்துரையில் பாரம்பரிய மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவங்கள் முதன்மைப் படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை ( Mainstreaming of Ayush in primary healthcare)தேசிய நலவாழ்வு ஊரக மற்றும் நகர்புற இயக்கம் கொண்டுள்ளது - கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆண்டுகளாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் என்பது சித்தா மற்றும் இந்திய முறை ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை உள்ளடக்கியதாக அமையாதது வேதனையளிக்கின்றது.

 

கடந்த 2010ஆம் ஆண்டில் சுமார் 470 இந்திய முறை சிகிச்சை சேவைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக சுகாதார நிதியில் கொண்டுவந்ததோடு அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய முறை மருத்துவ சேவைகள் மற்றும் சித்த சிகிச்சை முறைகளுக்கான பணியிடங்கள் ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை.

 

இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த சிகிச்சை முறைகள் ஏழை மற்றும் கிராமப்புற நடுத்தர மக்களுக்கு கிடைக்க இயலாத சூழல் உள்ளது.

 


இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த மினி கிளினிக்ஸ் திட்டத்தில் சித்தா உள்ளிட்ட ஆயுஸ் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என முதலமைச்சருக்கு பார்வையில் கண்டுள்ள 1 மற்றும் 2 மனுக்களின் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனாலும் இந்த மனுக்கள் தற்பொழுது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனரகத்தில் மனுக்கள் மீது தீர்வு காண முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகம் இந்த கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது.

 

இந்நிலையில் பார்வையில் கண்ட அரசாணையின்படி தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருப்பதை அறியமுடிகின்றது. இந்த மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும் ஆதலால் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்றும் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து பல்வேறு நலச் சங்கங்கள் முழு மனதுடன் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசு வழிகாட்டிய நெறிமுறைகளின்படி பணியாற்ற முழு மனதுடன் இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் அதன்மூலம் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சூழல் ஏற்பட்டுள்ளதையும் இந்த அமைப்பு நன்கு அறிந்துள்ளது.

 

கிராமங்களில் முழுமனதுடன் பணியாற்ற போக்குவரத்து வசதி குறைவு,தொலைதூரம் ஆக உள்ளது மினி கிளீனிக் பணி நேரங்கள் இரவு 8 மணி வரை நீடிப்பதால் இரவு வரை பணி புரிய வேண்டுமா? எனவும் அடிப்படை வசதிகள் உள்ளதா? காலை மாலை இரண்டு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பணிபுரிய வேண்டுமா? ஆகவே மருத்துவர்களுக்கு வாகன வசதி வேண்டும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு வேண்டும், பணிப் பாதுகாப்பு வேண்டும், ஒரு கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டும் மினி கிளினிக்குகளில் இரவு நேரங்களில் பணிபுரிய வேண்டி இருப்பதால் 25% Non practice allowance வேண்டுமெனவும் ,மினி கிளினிக் நடைமுறை உத்தரவுகளை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து முழு மனதுடன் பணியாற்ற முன்வராமல் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிகள் நடைபெறுவது வருந்தத்தக்கது

 

இந்நிலையில் ஆயுஸ் மருத்துவர்களை இந்த மினி கிளினிக்குகளில் பணியமர்த்தும் பட்சத்தில் அரசு அறிவித்துள்ள காலை மாலை இரண்டு பணி நேரங்களிலும் அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அரசின் நல்ல திட்டத்தை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க உறுதி கொள்வோம் என்றும் இந்த அமைப்பு நமது சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றது. மேலும் மத்தியிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் துணை சுகாதார மற்றும் ஆரம்ப சுகாதார கிராமப்புற மையங்களை ஆயுஷ் மருத்துவர்களை கொண்ட சுகாதார நலவாழ்வு கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கும்பொழுது தமிழகத்திலும் அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின்வாங்காமல் ஏழை எளிய மக்களை காக்க மக்களை தேடி மருத்துவர்களை அனுப்பும் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை ஆயுஸ் மருத்துவர்களை கொண்டு செயல்படுத்தினால் இத்திட்டம் இன்னும் கூடுதல் பலத்துடன் மக்களைச் சென்றடையும். அனைவருக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வாய்ப்பு ஆயுஷ் மருத்துவர்களுக்கு அமையுமென கோரிக்கை விடுத்து மேற்கண்ட பார்வையில் காணும் மனுக்களின் மீது இந்திய மருத்துவ இயக்குனருடன் விரிவான ஆலோசனை செய்து மனுக்களின் மீது இறுதி முடிவெடுக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

With kind regards,

AFAAQ Tamilnadu (Ayush welfare).(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, January 6, 2021

ராமேசுவரம்-திருச்சி ரெயில் 9 மாதத்துக்கு பிறகு மீண்டும் இயக்கம்!!

No comments :

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 2 ரெயில்களும், வாரத்தில் ஒரு முறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

கடந்த 9 மாதத்துக்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. நேற்று காலை 7 மணி அளவில் திருச்சியில் இருந்து 10 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ெரயில் காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் மற்றும் பாம்பன் ரெயில்  பாலம் வழியாக பகல் 12 மணி அளவில் ராமேசுவரம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.

 


பின்னர் இந்த ரெயில்  மீண்டும் பிற்பகல் 2.50 மணி அளவில் ராமேசுவரம் ரெயில்   நிலையத்தில் இருந்து அதே வழியாக திருச்சிக்கு புறப்பட்டது.

 

9 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே இயக்கப்பட்டுள்ள இந்த ரயில் சிறப்பு ரெயிலாகவும், அதுபோல் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்யும் வகையிலும் இயக்கப்படுகிறது.

 

இதே போல் ராமேசுவரம்-மதுரை வழித்தடத்திலும் வழக்கம்போல் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, January 3, 2021

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில், அதிரடி ஆய்வு நடத்திய கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இது மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து நவீன மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தங்களின் ஆஸ்பத்திரிகளுக்கு புரோக்கர்கள் மூலம் சில டாக்டர்கள் அழைத்து செல்வதாகவும், அறுவை சிகிச்சையை தாமதம் செய்வதோடு, பல்வேறு காரணங்களை கூறி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்வதாகவும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியானது புரோக்கர்களின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.


இதற்கு ஆஸ்பத்திரியில் உள்ள சில தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன.

 

சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை அழைத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வராமல் தன்னிச்சையாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.

 


இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் புகார்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 7 டாக்டர்கள் விடுமுறையில் சென்றிருப்பதாக கூறப்பட்டது. ஒரு டாக்டர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதும், இதன்காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவலமும் ஏற்பட்டிருப்பதை கலெக்டர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரில் 7 பேருக்கு விடுமுறை கொடுத்தது ஏன்? ஒருவர் எவ்வாறு அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியும்? என்று விசாரணை நடத்தினார்.

 

இந்த விசாரணை அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பின்னர் தூய்மை பணியாளர்களையும் அழைத்து விசாரித்து எச்சரித்தார். புகார்களுக்கு ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாருக்காவது தொடர்பு இருப்பதாக தெரியவந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

 

அரசு ஆஸ்பத்திரி வேலையே வேண்டாம், இந்த வேலையை விட்டுவிடலாம், கிளினிக் நடத்திக்கொள்ளலாம் என தப்பித்து செல்லலாம் என நினைத்தால், அதற்கும் வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள். இன்றோடு 2020-ம் ஆண்டு முடிகிறது. புத்தாண்டில் இருந்தாவது அனைவரும் திருந்தி, தங்கள் பணியை ஒழுங்காக செய்யுங்கள். உங்களின் வேலையை நீங்கள் சரியாக செய்தால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

 

கலெக்டரின் இந்த அதிரடி ஆய்வு மற்றும் கடுமையான எச்சரிக்கை காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் ஜவகர்லால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.