முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 31, 2022

ராமநாதபுரத்தில் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி!!!

No comments :

ராமநாதபுரத்தில் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 


ராமநாதபுரம் வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்களுக்கு புகைப்படபோட்டியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி மற்றும் புகைப்பட போட்டியும் நடத்தப்படுகிறது.

 

இப்போட்டியில், ராமநாதபுரத்தில் காணப்படும் நீர்நிலைகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்போரின் கல்வித் தகுதி, முகவரி, கைப்பேசி எண்களை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

 

தெளிவான முகவரி இல்லாத படங்கள் நிராகரிக்கப்படும்.

 

இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா உதவி வனப்பாதுகாவலர்

சோ. கணேசலிங்கம் (கைப்பேசி எண்- 9442407750) மற்றும் ராமநாதபுரம் வன உயிரின வனச்சரக அலுவலர் பா. ஜெபஸ் (கைப்பேசி எண்- 9025056009) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, January 29, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மனுத்தாக்கல் தொடங்கியது!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் மனுத்தாக்கல் தொடங்கியது. 

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதனையொட்டி மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அந்தந்த அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் கிருமிநாசினி கொடுத்து கைகளை கழுவிய பின்னர், முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். 

 

 


ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து நகரசபை ஆணையாளர் சந்திரா கூறியதாவது:-

 

ராமநாதபுரம் நகராட்சியில் தேர்தலை நடத்துவதற்கு நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வேட்பு மனுத்தாக்கல் மற்றும் அனைத்து தேர்தல் பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு கூறினார். 

 

வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முதல்நாள் என்பதால் ஏராளமானோர் நேரில் வந்து மனுக்களை பெற்று சென்றனர். இன்னும் பலர் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களின் மனுக்களை பூர்த்தி செய்யும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. 

இதற்கிடையே ராமநாதபுரம், கீழக்கரை பரமக்குடி, ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகளிலும், மண்டபம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி ஆகிய 7 பேரூராட்சிகளிலும் நேற்று முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, January 15, 2022

கீழை சவூதி அசோசியேஷன் சார்பாக ஜித்தாவில் ஒன்று கூடல் நிகழ்ச்சி!!

1 comment :


நேற்றைய தினம் *14.01.2022 -  வெள்ளிக்கிழமை, ஜித்தா மாநகரில் கீழக்கரை உறுப்பினர்கள் சார்பாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர்.

கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு உதவிகள் வழங்கி வரும் இந்த அசோசியேஷன்,
கீழக்கரை முன்னேற்றம் பற்றியும் இந்த குழுமத்தின் நோக்கம் பற்றியும் அறிமுகங்களுக்கு பிறகு
 தங்களுடைய எதிர்கால திட்டமிடல், முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடினர். 

 

மேலும் மேற்கு மண்டலத்தில் (ஜித்தா , மக்கா ,தாயிப், யான்பு,அபஹா,மதீனா ) இருப்பவர்கள் கீழே உள்ள உறுப்பினர்களை தொடர்புகொண்டு நம் குழுமத்தில் இணையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 

 உதவிகள் சம்பந்தமாக கீழே  உள்ள உறுப்பினர்களை  அணுகவும். 

1. அஹமத் ராசத் - +966 56 8144755

2.முகமது ஆசிஃப் - +966 54 093 5597

3.  ஹமீது ( ஹாஜி) - +966 54 0361288

 


செய்தி:

ஹமீது ராஜா

கீழை  சவூதி அசோசியேஷன்.(மேற்கு மண்டலம்)


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, January 13, 2022

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி யை பிரதமர் திறந்து வைத்தார்!!

No comments :

ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றினார்.


ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அருகே பட்டனம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா அருகில் 22.6 ஏக்கரில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தொடங்கின. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய இந்த பணிகள் ரூ.345 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தன.

 


இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அறிவித்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கேற்ப மருத்துவ கல்லூரி பணிகள் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று மாலை திறந்து வைத்தார். இதற்கான விழா ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கலையரங்க அறையில் எழில்மிகு விழாவாக நடைபெற்றது.

 

விழாவில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி புதிய மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார்.இந்த விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், நவாஸ்கனி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, January 11, 2022

KABABEQUE உணவகத்தின் புதிய கிளை இராமநாதபுரத்தில்!!

No comments :


KABABEQUE உணவகத்தின் புதிய கிளை இராமநாதபுரம் பாரதி நகரில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று  திறக்கப்பட்டது. 

 டிம் லைட் டைன்-இன், ஓபன் டைன்-இன், மஜ்லீஸ் அமைப்பு போன்ற மூன்று வகையான டைன்-இன் அமசங்களுடன் பெரிய புரொஜக்டர் திரையுடன் கூடிய 100 நபர்களுக்கு மேல் அமரும் வகையில் பிரம்மாண்டமான டைன்-இன் வசதி 

 

அரேபியன், இந்தியன், சைனீஸ் உட்பட 200க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த உணவு வகைகள் 

 

 பெண்களுக்கென பிரத்தியேக தொழுகை அறை

மற்றும் பல சிறப்பம்சங்களுடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் 

ருசியாக உண்டுமகிழ சிறந்த இடம் கபாபிக்யூ.

 

தொடர்பு: 9940404890

 

KABABEQUE  நிறுவனத்திற்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்!!(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, January 4, 2022

“Fb Designer Emporium” நான்காவது கிளை திறப்பு விழா!!

No comments :


முகவையை சேர்ந்த முகமது ஃபகத் என்பவரால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட Fb DESIGNER EMPORIUM என்னும் நிறுவனம் தமிழகத்தில் தனது நான்காவது கிளையை நிறுவியுள்ளது

 

 மண்ணடி (சென்னை), திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும்

Fb Designer Emporium-ன்  

நான்காவது கிளை சென்னை திருவல்லிகேணியில் கடந்த 1-1-2022ம் தேதியன்று திறக்கப்பட்டுள்ளது.


இதனை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்
K. நவாஸ்கனி அவர்கள் திறந்து வைத்து, Fb DESIGNER EMPORIUM குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

 

Fb DESIGNER EMPORIUM, கோட் சூட், செர்வானிதனித்துவமிக்க ஷர்ட், பேண்ட் என ஆண்களுக்கான துணி வகைகளை தயாரித்து வழங்குகிறது.

 

ஸ்தாபனத்தாருக்கு முகவை முரசு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.