முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 31, 2015

இன்று (31-10-2015) கீழக்கரை கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!! (UPDATED)

No comments :
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது.

இன்று (31-10-2015) காலை 8.30 மணி அளவில் காஞ்சிரங்குடி அருகே கனமழையின் காரணமாக முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து  விபத்துள்ளானது.

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.












பெரும் சேதத்திலிருந்து இறைவன் காப்பாற்றினான், சிறு காயங்களுடன் மாணவர்கள், ஒட்டுநர் மற்றும் நடத்துனர் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்கள் இராமநாதபுர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்தி மற்றும் படங்கள்: திரு சுஐபு, கீழக்கரை.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் எலக்ட்ரானிக் கடையில் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!!

No comments :

ராமநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரானிக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு அதிலிருந்த ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


ராமநாதபுரம் சாலைத் தெருவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இக்கடையின் பின்பக்க கதவில் துளையிட்டு அதிலிருந்த 141 செல்போன்கள், 8 மடிக்கணினிகள், 21 காமிராக்கள், 14 சார்ஜர்கள் உட்பட மொத்தம் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த போது பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கடையின் மேலாளர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து, ஒரு சிறுமி இறப்பு!!

No comments :
கீழக்கரை அருகே புதன்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

மைசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 35 பேர் தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களை தரிசிப்பதற்கு சுற்றுலா வேன் ஒன்றில் சில தினங்களுக்கு முன் புறப்பட்டனர். 

சுற்றுலா வேனை ஜாபர்கான்(54) என்பவர் ஓட்டிவந்தார். புதன்கிழமை நள்ளிரவு திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது நிலை தடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த மைசூர் விஜயநகர் சீனிவாசமூர்த்தி மகள் பூமிகா(9)  படுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த 14 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Friday, October 30, 2015

ஏழைகளுக்கு அளிக்கப்படும் மத்திய அரசு நிதி உதவி ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்வு!!

No comments :
ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது

கடந்த 1997-ம் ஆண்டு, ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதயம், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய்போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்காக, தலா ரூ.2 லட்சம் நிதி உதவி, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த நோயாளிகள், மத்திய அரசின் எந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலோ அல்லது அரசின் இதர ஆஸ்பத்திரிகளிலோ சிகிச்சைபெறலாம். இத்திட்டத்தின் மூலம், இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்மூலம், சிகிச்சைக்கான நடைமுறை தாமதம் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், ஆண்டுதோறும் கூடுதலான நோயாளிகள் பலன் அடைவார்கள்.
ஏழை நோயாளிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, 12 மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில், ரூ.50 லட்சம்வரை சுழல் நிதி அமைக்கப்பட்டுள்ளதாகமத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, ரூ.5 லட்சத்துக்கு மேல் நிதி உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே, மத்தியசுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மற்ற நோயாளிகளுக்கு நேரத்தின் அருமை கருதி, அந்தந்தமத்திய அரசு ஆஸ்பத்திரிகளே நிதி உதவியை வழங்கி, சிகிச்சையை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


செய்தி: முதுகுளத்தூர்.காம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, October 29, 2015

பறவைகளை வேட்டையாடிய திருப்புல்லாணி வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை தேடி பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. அழிந்து வரும் இனங்களில் உள்ள இந்த பறவைகளை மருத்துவ குணம் உள்ளதாக நம்பி கறிக்காக சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 




ராமநாதபுரம் அருகே உள்ள பொக்கானரேந்தல் அய்யனார்கோவில் காட்டுப்பகுதியில் வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில், வனக்காப்பாளர்கள் காதர்மஸ்தான், கார்மேகம், வேட்டை தடுப்பு காவலர்கள் நவநீதன், அழகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வலை விரித்து உள்ளான் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக திருப்புல்லாணி இந்திராநகரை சேர்ந்த புல்லாணி மகன் ராஜபாண்டி(வயது30) என்பவரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 உள்ளான் பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். லோடுமேன் வேலை பார்த்து வரும் ராஜபாண்டி உடல் வலிமை பெறுவதற்காக தனது குழந்தைகள் விரும்பி கேட்டதால் இரவு நேரத்தில் இந்த பறவைகளை பிடிக்க வந்ததாக தெரிவித்தார். வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த பறவைகளை வனத்துறையினர் மீண்டும் காட்டுப்பகுதியில் பறக்க விட்டனர். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம்!!

No comments :
தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு ராமேசுவரம், கீழக்கரை, ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து மதுரை சென்று வரும் தினசரிப் பேருந்துகள் மற்றும் கனரக வாகன போக்குவரத்தில் பொதுமக்கள் நலன் கருதி ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சி நடைபெறும் அக்.30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம்,பாண்டியூர், நயினார்கோயில், அண்டக்குடி, இளையான்குடி,சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை சென்று வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல் ரூ. 67 லட்சம்!!

No comments :

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ. 67 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.     


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மடப்புரம் காளியம்மன் கோயில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில், ரொக்கமாக வெளிநாட்டு பணம் உள்பட ரூ. 67 லட்சத்து 4 ஆயிரத்து 390ம், 51  கிராம் தங்கமும், 3 கிலோ 750 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தன.   இப்பணியில் ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, மேலாளர் லெட்சுமிமாலா, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கிப் பணியாளர்கள், கோயில் அலுவலர்கள்,ஊழியர்கள் ஈடுபட்டனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து பழங்குடியின மக்கள் போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை பழங்குடியின மக்கள் புதன்கிழமை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதி எம்.ஜி.ஆர்.நகரில் நரிக்குறவர் இன பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் முயல் மற்றும் கதுவாலிப்பறவைகளை வேட்டையாடி வந்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இவர்களது வீடுகளில் புகுந்து சோதனை செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த பாத்திரங்களையும் சமையல் பொருள்களையும் பறிமுதல் செய்து அவற்றை ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.
 இதனால் ஆத்திரமுற்ற பழங்குடியின மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வனக்காப்பாளர் எஸ்.பாஸ்கரன், வனவர் மதியழகன், ஜீப் ஒட்டுநர் சரவணன் உள்ளிட்டோரை சிறை பிடித்துக் கொண்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் துரை.விவேகானந்தன், சார்பு ஆய்வாளர்கள் கணேசலிங்க பாண்டியன், முத்துராமலிங்கம் மற்றும் பேராவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோட்டைச்சாமி உள்ளிட்டோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பழங்குடியின இளைஞர்களான துரை மற்றும் பொன்னையா ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து சமாதானப்படுத்தினர்.


வன அதிகாரிகள் அடிக்கடி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் சோதனை என்ற பெயரில் வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர். பேச்சுவார்த்தைக்குப்பிறகு வன அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மறியல் கைவிடப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, October 28, 2015

கலைகட்டும் ராமநாதபுர மாவட்ட புத்தகத்திருவிழா!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகதிருவிழாவில் ஏராளமான மாணவமாணவிகள் கலந்து கொண்டுபுத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 23–ஆம் தேதி முதல் கலாம் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 134 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனை மாணவமாணவிகள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த நாட்களாக ஏராளமான மாணவமாணவிகள்பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் மாணவமாணவிகள் தாமாக முன்வந்து உண்டியலில் பணம் சேமித்து புத்தகத்தை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு புத்தகம் வாங்கிட ஊக்குவிக்கப்பட்டனர். ரூ.10 முதல் ரூ. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் பார்வைக்கும்விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.


தினசரி மாலையில் அறிஞர்களுடனான கலந்துரையாடல்கள்சிந்தனையாளர்கள்கவிஞர்கள்எழுத்தாளர்களின் சிறப்புரைகள் நடைபெறுகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம்!!

No comments :
     
ராமேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள்பெறும் முகாம் நடைபெற்றது.


ராமேசுவரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்டு மனுக்கள் பெறும் முகாம் நடை பெற்றது. இதையொட்டி ராமேசுவரத்திற்கு வந்த அன்வர்ராஜா எம்.பி.யை நகரசபை தலைவர் அர்ச்சுனன் வரவேற்றார். தொடர்ந்து ராமேசுவரம் காட்டுப் பிள்ளையார் கோவில் மற்றும் ராம தீர்த்தம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுவையும் பெற்றுக் கொண்டார். அப்போது எம்.பி.யிடம் ஏராளமான பெண்கள் முதியோர் உதவி தொகை,விதவை பெண்களுக்கான உதவி தொகை கேட்டும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டும் மனு அளித்தனர்.



மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி. அனைத்து மனுவையும் பரிசீலித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி அதற்கான ஏற்பாடு களை செய்து தருவதாகவும் தெரிவித்தார். அப்போது உடன் ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுனன்,துணை தலைவர் குணசேகரன்,கட்சியின் நகர் செயலாளர் பெருமாள்,அவை தலைவர் பிச்சை, துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், கவுன்சிலர்கள் நாகசாமி, ராதாகிருஷ்ணன்,வீட்டுவசதி சங்க துணைத்தலைவர் ஸ்ரீகாந்த், மின் வாரிய பிரிவு கோட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், மேலவை பிரதிநிதி முனியசாமி, நிர்வாகிகள் அன்னகர்ணன், மாங்குடி செந்தூரான், சுதாகர், ராஜேந்திரன், வஸ்தாவிவெற்றிவேல், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
இதேபோல் ஓலைக்குடா, மாங்காடு, சம்பை, ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், எம்.ஆர்.டி.நகர், தெற்கு கரையூர் போன்ற பகுதிக்கும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அன்வர்ராஜா எம்.பி. குறைகள் கேட்டு மனுவை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, October 27, 2015

B.S. அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் Ph.D. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015!!

No comments :
  
சென்னையிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகள் படிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சென்னையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ள பல்கலை.களில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகமும் ஒன்று.

இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி படிப்புகள் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் பிஎச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்த பல்கலைக்கழகம். ஜனவரியில் சேரலாம்... தற்போது ஜனவரியில் பிஎச்.டி. படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக பத்திரிகைளிலும் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரூ.1,000-த்துக்கு கேட்புக் காசோலை(டி.டி) எடுத்து
Director (Admissions),
B.S. Abdur Rahman University,
Seethakathi Estate,
Vandalur,
Chennai-600048

என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு
+91-44-22751347,48,50,75 Extn:274,275 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
admissions@bsauniv.ac.in என்ற இ-மெயில் மூலம் பிஎச்.டி. சேர்க்கை குறித்து விவரங்களை அறியலாம்.


கூடுதல் விவரங்களுக்கு http://www.bsauniv.ac.in/admission-for-research-scholars என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத் தருமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை!!

No comments :
துபை நாட்டில் சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத் தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருப்புல்லாணி அருகே வடக்கு கும்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ஆனந்த வள்ளி (33). முனீஸ்வரன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துபை நாட்டில் உள்ள சார்ஜாவுக்கு பெயிண்டர் வேலைக்காக அழைத்து செல்லப்பட்டாராம். அங்கு சம்பளமும், உணவும் தராமல் துன்புறுத்துவதாகவும், அவரை விடுவிக்கவும் மறுப்பதாகவும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு தெரிவிக்கிறாராம். மேலும் விசா தேதி முடிந்தும் தன்னை அனுப்பி வைக்க வில்லை என்றும் கூறுகிறாராம்.

அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரை மீட்டுத் தருமாறு ஆனந்தவள்ளி ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

மகனை மீட்டுத்தர பெற்றோர் மனு: முதுகுளத்தூர் தாலுகா சாம்பக்குளம் அருகேயுள்ளது அப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.அர்ச்சுனனும், இவரது மனைவி முனியம்மாளும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: குவைத் நாட்டில் உள்ள கம்பெனிக்கு ஓட்டுநர் வேலைக்கு எங்கள் மகன் சண்முகவேலை, பரமக்குடியைச் சேர்ந்த முகவர் மூலம் அனுப்பி வைத்தோம். அங்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாகத் தருகிறார்களாம். பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்குமாறு துன்புறுத்துகிறார்களாம். தான் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக தொலைபேசியில் எங்கள் மகன் தெரிவித்தார். எனவே அவரை மீட்டு எங்களிடம் சேர்க்க வேண்டும். மேலும் அந்த முகவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் புகார்!!

No comments :

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அதன் நிர்வாகிகள் திங்கள்கிழமை புகார் செய்துள்ளனர்.

அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் இ.அப்துல்நாசர் தலைமையில் 100 பெண்கள் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: 

அக்.15 ஆம் தேதி பெரியபட்டினத்தில் முகம்மது ரைசுதீன் என்பவரை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறி, அக்கிராம பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 11 நிர்வாகிகள் திருப்புல்லாணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 10 பேர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. 


இவ்விஷயத்தில் காவல்துறை தீர விசாரிக்காமல் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. எனவே நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, October 26, 2015

தொண்டி அருகே கொக்கு வேட்டையாடிய இருவர் கைது!!

No comments :
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கிராமத்தில் வன பகுதிகளில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் மாவட்ட வன உயிரினகாப்பாளர் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பாஸ்கரன் ,வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ் , விஜயபாஸ்கர், அய்யர்பிச்சை ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது அங்கு பறவைகளை வேட்டையாடியது தொடர்பாக சோளியக்குடியை சேர்ந்த நாகராஜ் (வயது30), செய்யது (28) ஆகிய 2 பேரையும் பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 25கொக்குகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அபராதம் வசூலித்தனர். பின்னர் கொக்குகள் சம்பை மாங்க்ரோவ் காடுக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன. 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார பண்டங்கள் விற்பனையாளர்கள் முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்!!

No comments :
பொதுமக்களுக்கு தரமான சுவீட்ஸ், காரங்களை விற்பனை செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:


தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூல பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக புகார்கள் இருப்பின், ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவரிடம் 04567-231170 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, October 25, 2015

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு - TNPSC அறிவிப்பு!!

No comments :
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700 என்ற விகிதத்தில் ஊதியம் இருக்கும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

http://tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 4 ஆகும்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)