முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 29, 2022

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் - நவ-11 விண்ணப்பிக்க கடைசி நாள் !!

No comments :

அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

புதுமை பெண் திட்டம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

 

இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து உள்ளனர். ​தற்போது இந்த வலைத்தளத்தில் www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

 

மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

 


​இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி படிக்கும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

 

மாணவிகள் ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

 

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 18, 2022

நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து

 

www.drbramnad.net

 

என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbramnad.net) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை கவனமாக கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிப்பது தொடர்பாக

 

https://youtube/G6c5e2ELJD8

 

என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

 

முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdsramnad@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04567-230950 வாயிலாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

 

இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 10, 2022

மயிலாடுதுறையில் ஓர் புதிய உதயம் ” மாஸ்டர் மெட்டல்ஸ்’’!!

No comments :


மயிலாடுதுறை மாநகரில் நம் முகவை மைந்தர்களால் திறக்கப்பட்டிருக்கிறது ஓர் புதிய ஹார்டுவேர் & அலுமினியம் ஷோரூம்.

 





கட்டுமானத்தேவைகளுக்கான எல்லா வகையான ஹார்டுவேர் கலெக்‌ஷன்ஸ்:

 

இண்டீரியர் வேவைகளுக்குத்தேவையான அனைத்து வகையான அலுமினியம் & ஸ்டைன்லெஸ் ஸ்டீல் செக்‌ஷன்ஸ்:

 


அலுமினியம் ஏணிகள்:

போன்ற எல்லா வகையான ஹார்டுவேர்ஸ் பொருட்களும் கிடைக்கும்,

 

இந்நிறுவனத்தார் கூறுகையில்,

மேற்கூறிய எல்லா பொருட்களும், நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் வழங்குவதோடு, விற்பனைக்கு முன்னும் பின்னுமான வாடிக்கையாளார் சேவைகளும் வழங்கி வருகிறோம்.

 

எங்களிடம் உள்ள அனுபவமிக்க ஃபேப்ரிகேட்டர்கள் மூலம், அலுமினியம் இண்டீரியர் வேலைகள் செய்து கொடுத்து வருகிறோம்.

 

தொலைபேசி / வாட்ஸப் வழி ஆர்டர்களுக்கு தமிழகத்தின் எந்த பாகத்திற்கும் இலவச டோர் டெலிவரி செய்வதோடு,
விரைவில் பிரத்யேக ஆன்லைன் விற்பனைக்கான தயாரிப்புகள் செய்து வருகிறோம்.

 

தங்கள் அன்பான ஆதரவுகள் வழங்கி எங்கள் வியாபாரத்திற்கு துணை நிற்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கூறினர்

 

நம் முகவை முரசு சார்பாக நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள்!!



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in)
 
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, October 7, 2022

கீழக்கரையில் நடைபெற்ற ஜூனியர் வாலிபால் போட்டிகள்!!

No comments :

14 வயதுக்குட்பட்டவர்களுக்கான வாலிபால் போட்டிகள் புதுத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.

6ம் தேதி நடந்து முடிந்த நடந்த MYFA JUNIOR'S கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

வெற்றி பெற்ற வீரர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்:

 

முதல் பரிசு: கிழக்குத் தெரு டிப்போ

இரண்டாம் பரிசு: Myfa Junior's

மூன்றாம் பரிசு: ஏர்வாடி

 



பரிசு வழங்கியவர்கள் விபரம்:

முதல் பரிசு:3000

Al Asli Electronics

Hol Al Anz, Dubai

 

இரண்டாம் பரிசு:2000

Formext Construction

Kilakarai

 

மூன்றாம் பரிசு:1000

As Group

St Cargo

 

சிறப்பு பரிசு:5000

Al Afia Tours & Travels

Kilakarai

கண்மணி ஜமீல்(Myfa)

கீழக்கரை

 

Cup Sponsers:

Mr & Mrs Tailoring

Kilakarai

 

தகவல்: பயிற்சியாளர் ஹமீது ராஜா.

 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 3, 2022

இராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டிகள்!!

No comments :

இராமநாதபுரத்தில் நடந்து மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் செலக்சன்-ல் சுமார் 80 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

ராஜா மேல்நிலை பள்ளியில் நடந்த இந்த போட்டியில், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியை சார்ந்த மாணவர்கள்


Hameed Al Zehran 5 th standard,

Fahad 9 th standard,

Muwad 5 th standard,

 

கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளார்கள்..

 



 

வெற்றி பெற்ற அவர்கள் மாநில அளவில் ஈரோட்டில் அக்டோபர் 15, நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள்..

 




Coach Name: மது பிரீதா, Roll Ball Association, Ramanathapuram....


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 2, 2022

வீர தீர செயலுக்கான விருத்துக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

 

தமிழக அரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் மூலமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

 


இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதே போன்று, வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன்படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தை களிடமிருந்து விண்ணப்பங்கள் நவம்பவர் 30-ந் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

 

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலு வலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 24-ந் தேதி அன்று மாநில விருது வழங்கப்படும்.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.