முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 17, 2021

மாவட்டம் தோறும் கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் அமைக்க ஆயுஷ் வெல்ஃபேர் கோரிக்கை!!

No comments :
மாவட்டம் தோறும் கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் அமைக்க ஆயுஷ் வெல்ஃபேர் கோரிக்கை:னுப்புநர் : மாநில துனைத் தலைவர் ,
                          AFAAQ ,Tamilnadu ( Ayush welfare),
                          3/ 166A, தென்றல் நகர் ,
                            வாணி( அஞ்சல்). 
                             இராமநாதபுரம் .623536 

   பெறுநர்:   1.உயர்திரு. முதன்மைச் செயலாளர்                                     சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை,
                                               சென்னை-9

                         2.அனைத்து மாவட்ட ஆட்சிதலைவர்கள்
                            
                          3.அனைத்து சுகாதார நலவாழ்வு                                             சங்கங்கள் 
                            
      

   பொருள் :      
10 நாட்களில்- 100 கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் நிறுவ அரசு முடிவு ,
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அறிக்கை - தொடர்பாக....

மதிப்பிற்குரிய ஐயா, 

               மேற்க்கண்ட பொருள் குறித்த தங்களது அறிக்கை வாயிலாக கீழ்க்காணும் கோரிக்கையை பதிவு செய்கிறோம்
கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்க பொது சுகாதார துறை மற்றும் இந்திய மருத்துவ சித்த  மற்றும் ஆயுஷ் மருத்துவ துறையும் இணைந்து  போர்க்கால அடிப்படையில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மனிதவள மேலாண்மையை உறுதி செய்யவும் தேவைக்கு ஏற்ப  மாவட்ட அளவில் அந்தந்த பகுதிகளில் உள்ள  தனியார் சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்களை கூடுதலாக பணியமர்த்திட   வேண்டுகிறோம். .

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, May 16, 2021

கொேரானா நிவாரண நிதி முதல் கட்ட ரூ.2000 வழங்கப்படுகிறது!!

No comments :

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கொேரானா நிதியாக ரூ.4 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி முதல் கட்டமாக தற்போது ரூ.2000 வழங்கப்படுகிறது.

 

அந்த திட்டத்தை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் ஆகிய பகுதிகளில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 


பரமக்குடி தாலுகாவில் 71 ஆயிரத்து 687 குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண நிதி மூலம் பயன்பெறுவர். தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை சொன்னபடி நிறைவேற்றி வருகிறார்.

ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும். சொன்னதை செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவோம். இவ்வாறு பேசினார். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, May 3, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் வெற்றி கொண்டது திமுக கூட்டணி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

 

மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

 

அதில் திருவாடானை தொகுதியைத் தவிர மற்ற 3 தொகுதிகளிலும் திமுக நேரடியாகக் களம் கண்டது.

 

ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அதிமுக கூட்டணியான பாஜக வேட்பாளர் து.குப்புராமை எதிர்த்துப் போட்டியிட்டார். இறுதியில் திமுக வேட்பாளர் 50,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ராமநாதபுரமும் ஒன்று என்கிறார்கள் திமுகவினர்.

 


முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் 1,01,901 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி 81,180 வாக்குகள் பெற்றார். அதன்படி திமுக வேட்பாளர் 20,721 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித்தொகுதியான பரமக்குடியில் திமுக வேட்பாளர் முருகேசன் 84,864 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் 71,579 வாக்குகள் பெற்றார். அதன்படி திமுக வேட்பாளர் 13,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

திருவாடானை தொகுதியின் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான கருமாணிக்கம் 77,347 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.சி.ஆணிமுத்து 64,031 வாக்குகள் பெற்றார். அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களம் கண்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரம் சட்டப் பேரவையில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற மரபு கருத்து இத்தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.