முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 23, 2020

ராமநாதபுர மாவட்டம் முழுதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு!!

No comments :
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான நமது போர் வெற்றி பெறட்டும். வீட்டிற்குள்ளேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியில் வராமல் இருங்கள் என்று அறிவித்து இருந்தார். பிரதமரின் இந்த வேண்டுகோளின்படி தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ்நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜ வீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு முதல் முன்அறிவிப்புடன் பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் மக்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொண்டனர். பஸ்கள் வராததால் பஸ் நிலைய பகுதி முழுவதும் பஸ்கள் மற்றும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டதால் மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி யாரும் வெளியில் செல்ல முடியவில்லை.

ஒரு சில மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் பூத்துகள் மட்டும் திறந்திருந்தன. பாரபட்சமின்றி பொதுமக்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.



எந்த வாகனங்களும் ஓடாமல் இருந்ததாலும், கடைகள் வெளியில் பரப்பி வைக்கப்படாததாலும் அனைத்து சாலைகளும் பரந்து விரிந்து விசாலமாக காட்சியளித்தது. ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்ததால் ரெயில் நிலைய பகுதி முழுவதும் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் அதிகாலையில் வழக்கம்போல ஒரு சில பெட்டிக்கடைகள் திறந்திருந்தன. அந்த கடைகளையும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அடைக்குமாறு கூறினர். மீன்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளும், காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.


ராமநாதபுரம் நகரில் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளிலும் உள்நோயாளிகளை தவிர வெளிநோயாளிகள் யாரும் செல்லவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகள் கூட அமைதியாக காணப்பட்டன.

அகில இந்திய புண்ணியதலமான ராமேசுவரம் கோவிலில் வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. ஓரிடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்னி தீர்த்த கடற்கரை, நான்கு ரத வீதி, திட்டகுடி சந்திப்பு, பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ராமேசுவரத்தில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவில் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் கடற்கரை ஆகியவை ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.


ராமேசுவரம் நகர் முழுவதும் தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்ல வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி புதுரோடு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் மருத்து கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, March 17, 2020

கீழக்கரை & பெரியபட்டினத்தில் வங்கிகளில் பணத்தை திரும்ப பெறும் போராட்டம்!!

No comments :
குடியுரிமை திருத்த சட்ட த்தை எதிர்த்து நேற்று காலை 10:00 முதல்மாலை 4:00 மணி வரை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி  பெரியபட்டினத்தில்22வது நாளாகவும், கீழக்கரையில் 12வதுநாளாகவும்தொடர் போராட்டம் நடக்கிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்வங்கி கணக்கு வைத்துள்ள பேராட்டக் குழுவினர், வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்தனர்.




நேற்று பெரியபட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கியிலும், கீழக்கரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட10 வங்கிகள், அஞ்சல் நிலையம்ஆகியவற்றில் ஒரே நேரத்தில்பணம் எடுக்க திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல்வங்கி ஊழியர்கள் திணறினர். இதையடுத்து வங்கிகளின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, March 14, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி!!

No comments :
ரஷ்ய நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக 2 போ் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதியாா் நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி ஜெயப்பிரியா (34). இவருக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக இளையான்குடி வாலையனேந்தலைச் சோ்ந்த கருப்பையா, கண்ணன் ஆகியோா் கூறியுள்ளனா். அதனடிப்படையில் ஜெயப்பிரியா தரப்பிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பரமக்குடியில் உள்ள டிராவல்ஸ் அறையில் வைத்து ரூ.2.10 லட்சம் தந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.



இதுகுறித்து ஜெயப்பிரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கருப்பையா, கண்ணன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனைப் பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.
தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சிப் பள்ளி வளாகத்தில் சத்தான உணவின் அவசியத்தை விளக்கும் வகையிலான விழிப்புணா்வு பிரசார வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனைத்தொடா்ந்து வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்த அவா் கூறியது:
உடல் நலம் மேம்பட சத்தான உணவை உண்பது அவசியம். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள், தாய்மாா்கள் ஆகியோருக்கான சத்தான உணவை வழங்குவதிலும், சுகாதாரத்தை காப்பதிலும் முக்கியத்துவம் அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.


கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வகை தொற்று நோய்களையும் தடுக்க கைகழுவுவதை கடைப்பிடிப்பது அவசியம்.
ராமநாதபுரத்திலிருந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற 221 போ் ஊா் திரும்பியுள்ளனா். அவா்கள் 14 நாள்கள் மருத்துவத் தொடா் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 190 போ் வீடுகளில் இருந்தவாறே 40 நாள்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.
கரோனா வைரஸ் கண்டறியும் மருத்துவப் பிரிவுகள் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தோருக்கான சிறப்பு சிகிச்சைக்குரிய பிரிவுகளும் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக பள்ளிக் குழந்தைகள் சாா்பில் அமைக்கப்பட்ட சத்தான உணவுக் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

செய்தி: தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, March 2, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு; ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்தேர்வை 14,765 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

No comments :

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்தேர்வை 14,765 மாணவர்கள் எழுதுகின்றனர்.


ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்விற்காக 18, பரமக்குடி 18, மண்டபம் 22, என 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 6 மையங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.தேர்வுகளை கண்காணிக்க மாநில பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.



மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 9:00 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். தேர்வு மையத்திற்கு பேனாவை தவிர எந்த பொருளையும் எடுத்து வரக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்த்துக்கள்!!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, March 1, 2020

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!!

No comments :
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.


திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் அமைய இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  இந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை - ஆணையா்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ஆ.தனலட்சுமி எச்சரித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 21 வாா்டுகளில் 38,355 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இதில் 30,915 போ் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, கடை வாடகை, குத்தகை செலுத்துகின்றனா். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2.76 கோடி வரி வசூலாக வேண்டும். ஆனால் ரூ. 1.60 கோடி வரை மட்டுமே வரி செலுத்துகின்றனா்.



பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.


மேலும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவா்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஜப்தி நடவடிக்கை தவிா்க்க மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரியை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என ஆணையா் அ.தனலட்சுமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.