முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 23, 2023

ராமநாதபுரத்தில் பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது!!

No comments :

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தேர்வு வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.



இதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தங்களது பெயர்களை வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள வலைப்பயிற்சி களத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உரிய படிவத்துடன் ஆதார் கார்டு நகலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

இதுகுறித்து மேலும் விவரங்களை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் மாரீஸ்வரனை 9443112678 என்ற எண்ணிலும்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் சதீஷ்குமாரை 9443978488 என்ற எண்ணிலும்

தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 8, 2023

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

காலியிடங்கள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


அதன்படி பரமக்குடி வட்டார இயக்க மேலாளர்,

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

திருப்புல்லாணி-2,

திருவாடானை-4,

ஆர்.எஸ்.மங்களம்-2,

மண்டபம்-1,

நயினார்கோவில்-1,

போகலூர்-1,

முதுகுளத்தூர்-3,

கமுதி-2,

கடலாடி-3

 

என மொத்தம் ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலியிடங்கள் உள்ளன. வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரியாக இருக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு.

 

28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் நல மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வரும் 22.2.23-க்குள் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சுயவிவரங்களுடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும், தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 1, 2023

விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு; எப்படி பெறுவது?!!

No comments :

தமிழக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண் உழவர் நலத்துறை மூலம் முழு மானியத்தில் மரக்கன்றுகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு முறையில் நடவு செய்வதாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டேர் பரப்புக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

 


இத்திட்டத்தின் மூலம் 29 வகையான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

செம்மரம், புங்கம், வேங்கை, குடம்புளி, மகோகனி, கொடுக்காபுளி, மருதம், பூவரசு, நாவல், இலுப்பை, நெல்லி ஆகிய மரக்கன்றுகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தினை பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் நிலத்தை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்கப்படும்.

 

விவசாயிகளுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.