முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 31, 2015

விகடன் டாப் 10 ல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. நந்தகுமார்!!

No comments :
டாப் 10 தேர்வு ! ராமநாதபுரம் மாவட்டத்தை வசந்தமாக்கும் முயற்சியில் கலெக்டர் நந்தகுமார்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் 5000 பண்ணை குட்டைகள்,600க்கும் அதிகமான உறைகிணறுகள்,விவாசாத்துறையில் புதுமை ,உலக தர ஹாக்கி மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் என அவரின் பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக 2015 டாப் 10 மனதர்களில் ஒருவராக விகடன் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நன்றி விகடன் குழு. பாரட்டுக்கள் நந்தகுமார் ஐயா!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பூலோகம் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே பூலோகம்’.

வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு பரம்பரைகளுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.
எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.

பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.


ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது பூலோகம்கதை.

குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.

சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.

எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.
அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.

பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள். நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.

விமர்சனம்: தி ஹிந்து



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் இலவச கண் சிகிச்சை முகாம்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் ஜனவரி மாதம் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெறும் ஊர்கள் மற்றும் நாள் பற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



 அவரது செய்திக் குறிப்பு வருமாறு: முகாம் நடைபெறும் கிராமங்கள்: (தேதி அடைப்புக் குறிக்குள்)

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி (3.1.2016),
முத்துப்பேட்டை இந்திரா நகர் சமுதாயக் கூடம் (6.1.2016), ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்(11.1.2016),
தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (12.1.2016),
ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (20.1.2016),
ஆர்.எஸ்.மங்கலம் மதார்ஸா பள்ளிவாசல் வளாகம் (21.1.2016), உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (22.1.2016),
முதுகுளத்தூர் எஸ்.கே.திருமண மண்டபம் (23.1.2016),
எஸ்.பி.பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் முதுகுளத்தூர் அரசு தாலுகா மருத்துவமனை (27.1.2016),
கமுதி அரசு மருத்துவமனை (28.1.2016),
எமனேசுவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (29.1.2016).

இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற்று பயன்பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, December 30, 2015

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு KTic மீலாது விழா!

No comments :
குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாள் விழா! தமிழக அறிஞர் பெருமக்கள் பங்கேற்பு! சிறப்பு மலர்வருட நாட்காட்டி உட்பட நூல்கள்குறுந்தகடுகள் வெளியீடு!

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 11ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் டிஸம்பர் 24,2015 வியாழன் அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (25/12/2015) அன்று நண்பகல் நிகழ்ச்சி அதே பள்ளிவாசலிலும்மாலை நிகழ்ச்சி ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் நடைபெற்றது. சனிக்கிழமை (26/12/2015) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெற்றது.



அனைத்து நிகழ்ச்சிகளையும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இளவல் எம்.என். அப்துல் பாஸித் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளரும்சென்னைப் பல்கலைக்ககழக அரபித்துறை பேராசிரியருமான மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ மற்றும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சென்னை துறைமுக வட்டார துணைச் செயலாளரும்மண்ணடி லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலின் தலைமை இமாமுமான மவ்லவீ எஸ். ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.






இவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் மவ்லவீ அன்வர் பாதுஷா உலவீ அவர்களுக்கு மார்க்க விளக்க பேரொளிமற்றும் மவ்லவீ ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவீ அவர்களுக்கு இளம் மார்க்கப் போராளிவிருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. 

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 11ம் ஆண்டு சிறப்பு மலர், 2016ம் ஆண்டு வருட நாட்காட்டி, சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவு குறுந்தகடுகள் மற்றும் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குவைத்தில் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

இரவு நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு கேள்வி-பதில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, மவ்லவீ அன்வர் பாதுஷா உலவீ அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை தந்தார்.

மூன்று நாட்கள், நான்கு இடங்களில் தொடராக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 2,000 (இரண்டாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், வருட நாட்காட்டி, தேநீர், பழரசம், பேரீத்தம் பழம், சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகளும் வழங்கப்பட்டன.


செய்தி: திரு. கலீல் பாகவி, குவைத்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, December 29, 2015

பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு!!

1 comment :
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் பணியில் சேர முடியும். இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்தொடரமைப்பு கழகம், மின்உற்பத்தி, மின்பகிர்மான கழகம் ஆகிய துறைகளில் உதவி என்ஜினீயர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016 ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத்துத் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு குறித்த விவரங்களை www.tangedco.gov.in என்ற மின்சார வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பேருந்து வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு!!

No comments :
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். அப்போது அங்கு வந்த பெரியபட்டிணம் ஊராட்சி தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கிராம தலைவர் ஆறுமுகம் தலைமையில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 




இதுகுறித்து பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கூறியதாவது:- பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாங்கள் கடற்கரை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 120 மாணவ-மாணவிகள் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். 

எங்கள் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் நடந்து சென்று வருகிறோம். தினமும் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே, காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கூடம் சென்று வரும் வகையில் பஸ்வசதி செய்து தர வேண்டும்.

இதுதொடர்பாக பெரியபட்டினம் ஊராட்சி சார்பில் தலைவர் கபீர் மூலம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எங்களின் அவசிய தேவையை கருத்தில் கொண்டு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்கப்படும் என்று கலெக்டர் நந்தகுமார் மாணவ-மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

TNPSC குரூப் II மற்றும் VAO தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்!!

No comments :
TNPSC குரூப் II மற்றும் VAO தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்!!



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, December 28, 2015

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா நடைபெற்றது!!

No comments :
ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அமரர் த. குழந்தைச் செட்டியார் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு, மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர் ராஜா தலைமை வகித்தார்.


சங்கத்தின் தலைவர் மை. அப்துல்சலாம், துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மற்றொரு துணைத் தலைவர் குழ. விவேகானந்தன் வரவேற்றுப் பேசினார். விழாவை அறிமுகம் செய்து சங்கச் செயலர் டாக்டர் பொ. சந்திரசேகரன் பேசினார். அமரர் குழந்தைச் செட்டியாரின் உருவப்படத்தை பா. ரெத்தினம் செட்டியார் திறந்து வைத்தார்.

நினைவும், கனிவும் என்ற தலைப்பில் சங்க உறுப்பினர் சீ. நாராயணன் பேசினார். கவிஞர்கள் மானுடப்பிரியன், கருணாகரன், நா.வேலுச்சாமிதுரை ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர்.

விழாவில், பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த
ஆ.வே. ராஜேந்திரன் (ஆசிரியப் பணி),
மு. காந்தி (ஆன்மிகப் பணி),
சு. முபாரக் அலி (இசைப் பணி),
சா.ஜா.பொ. பாண்டியன் (கல்வி மற்றும் தமிழ்ப் பணி),
செ.ந. மகாதேவன் (வணிகப் பணி),
டாக்டர் இ. மன்சூர் (மருத்துவப் பணி),
ராமலிங்கா அன்பு இல்லம் (சமுதாயப் பணி) ஆகியோருக்கு சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியார் விருதை, வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கிப் பேசினார்.

இதில், ஆயிர வைசிய மகாஜன சபையின் தலைவர் எம்.எஸ். கேசவன், திருக்குறள் பேரவையின் தலைவர் ஆ. வேணுகோபாலன், கவிஞர் மாணிக்கவாசகம் உள்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 27, 2015

கீழக்கரையில் டிசம்பர் 29ம் தேதி அனைத்து ஜமாத் மீலாது விழா!!

No comments :
கீழக்கரையில் டிசம்பர் 29ம் தேதி அனைத்து ஜமாத் மீலாது விழா!!





செய்தி: திரு.அல்லாஹ் பக்ஸ், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2015!!

No comments :
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2015. முந்துங்கள்




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

குவைத்-ல் ஜனவரி 7-8 தேதிகளில் மீலாது விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா!!

No comments :

குவைத்-ல் ஜனவரி 7-8 தேதிகளில் மீலாது விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா!!


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக, அக்கல்லூரியின் முதல்வர் சுமையா சனிக்கிழமை தெரிவித்தார்.



இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு கே.டி.அகாதெமி டிஜிட்டல் இந்தியா-2015 திட்டத்தின் கீழ், கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சிறுபான்மை மகளிர் மற்றும் மாணவர்கள் 100 பேருக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி, இம்மாதம் 28, 29, 30 ஆகிய 3 நாள்கள் நடத்தப்படும். எனவே, இதில் பங்கேற்று பயன்பெறுமாறு, முதல்வர் சுமையா தெரிவித்துள்ளார்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, December 26, 2015

கீழக்கரை கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா!!

No comments :
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.





150 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட்டது.

10 மாணாக்கர்கள் பெரியார் விருது பெற்றனர், விருதுடன் சேர்த்து ரூ. 10,000/- ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு.சுந்தரராஜன், திரு. அன்வர் ராஜா எம்.பி, இராமநாதபுர மாவட்ட செயலாளர் திரு.தர்மர், கீழக்கரை நகராட்சி தலைவர்கள், இளைஞர் அணி செயலாளர் திரு. இம்பாலா சுல்தான், மற்றும் இதர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொறியியல் கல்லூரி முதல்வர் திரு.ஜகபர் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் திரு.அலாவுதீன் ஆகியோர் வரவேற்று நன்றிகூறினர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி. பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது: 14,16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சிக்கான தேர்வு இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

பங்கேற்க விரும்புவோர் 9626984212 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பசங்க 2 - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார், வித்யா பிரதீப், நிஷேஷ், பேபி வைஷ்ணவி, முனிஸ்காந்த் இசை: ஆரோல் கரோலி
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம்
தயாரிப்பு: 2 டி என்டர்டெயின்மென்ட்
எழுத்து - இயக்கம்: பாண்டிராஜ்




பசங்க உலகம் பாண்டிராஜுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. பிடிபட்டும் இருக்கிறது. முதல் படம் பசங்க அழுத்தமாக இருந்தது... இந்த பசங்க 2 அழுத்தமாக, கூடவே கொஞ்சம் நகரத்துப் பளபளப்புடன் வந்திருக்கிறது. இரண்டு இளம் தம்பதியர். சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள். இரு தம்பதியருக்கும் இரண்டு குழந்தைகள். இரு குழந்தைகளுமே சரியான வாண்டுகள். இவர்கள் என்ன செய்தாலும் அது அந்தப் பெற்றோருக்கு எரிச்சலைத் தருகிறது. சுற்றியிருப்பவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இவர்களை இப்படியே விட்டால் நிம்மதி போய்விடும் என நினைத்து ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். அங்கும் ஏகப்பட்ட குட்டி கலாட்டா செய்து தப்பி வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். இனி ஹாஸ்டலே வேண்டாம்... நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம் என குழந்தைகள் சத்தியம் செய்கிறார்கள். அந்த நேரத்தில்தான் அந்தத் தம்பதிகள் டாக்டர் சூர்யாவைச் சந்திக்கிறார்கள். டாக்டர் சூர்யா - அமலா தம்பதி ஒரு ஐடியல் ஜோடி. குழந்தைகள் வளர்ப்பில் அவர்களைப் போன்ற உன்னத தம்பதிகளைப் பார்க்க முடியாது.

இந்த தம்பதிகளின் பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து அவர்களைச் சரிசெய்வதுடன், அவர்களின் குழந்தைகளின் திறமையை எப்படி உணர வைக்கிறார் என்பது மீதி. குழந்தைகளின் உலகம் வேறு. அந்த உலகைப் பார்க்க, கமர்ஷியல் சமரசங்களில் சிக்கி அல்லாடும் பெற்றோரு வேறு ஒரு மனநிலை தேவைப்படுகிறது என்பதை ரொம்ப கலர்ஃபுல்லாகச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். ஆனால் பிரச்சினைக்குரிய பெற்றோர், குழந்தைகளைக் காட்டிய விதத்தில் தெரியும் 'ரியலிஸம்', சூர்யா தம்பதிகள், குழந்தைகளைக் காட்டும்போது 'உட்டோப்பியனிஸ'மாகிவிடுகிறது.. அதாவது முழுக்க கற்பனையுலகம்! இப்படி ஒரு தம்பதி - குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை... இருந்தா நல்லாருக்கும் என கமல்தனமாக சொல்லத் தோன்றுகிறது, சூர்யா - அமலா மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது.

அந்த டேலன்ட் போட்டி டிவி ஷோ மாதிரி இருந்தாலும், அந்த சுட்டிப் பெண் கதை சொல்லும்போது கலங்கடித்துவிடுகிறாள். சூர்யா கெஸ்ட் ரோல் என்று சொன்னாலும், இந்தப் படத்தை உருவாக்கியது, இமேஜை அப்படி ஓரமாக வைத்துவிட்டு இறங்கி நடித்திருப்பது போன்றவற்றால்... அவர்தான் படத்தின் ஹீரோ. வெல்டன் சூர்யா!

அமலா பால் முன்பை விட ரொம்ப அழகாகத் தெரிகிறார், ஏற்றுக் கொண்ட வேடத்தை பக்குவமாக, கச்சிதமாக செய்த விதத்தில். பிந்து மாதவி, கார்த்திக் குமார், முனீஸ்காந்த், வித்யா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் பணக்காரராக இருந்தும் போகும் இடத்திலெல்லாம் ஏதாவது ஒரு பொருளைச் 'சுடும்' முனீஸ்காந்த் கவர்கிறார்.

பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறது. அருள் கரோலியின் பின்னணி இசை உறுத்தவில்லை. பிஸினஸ், வேலை என பரபரக்கும் தம்பதியருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பொறுமையாக க்ளாஸ் எடுத்திருக்கிறார்கள் பாண்டிராஜும் சூர்யாவும். கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் தோட்டக்கலைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது!!

No comments :
ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணுப் பூங்காவில் தோட்டக்கலைக் கண்காட்சியை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அச்சடிப்பிரம்பு கிராமத்தில் உள்ள மரபணுப் பூங்காவில், தோட்டக் கலைத்துறையால் நடத்தப்படும் இக்கண்காட்சியில் காய்கறிகள், மலர்களில் பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விநாயகர், ஏசுநாதர், வாத்து, முயல், கொக்கு, ஆமை, கோழி, சேவல், யானை, டைனோசர், டால்பின், வண்ணத்துப்பூச்சி, பனிக்கரடி உள்ளிட்ட சிற்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு வகையான ரோஜாப் பூக்கள், பிளாஸ்டிக் போன்ற இயற்கைப் பூக்களான ஹெலிகோனியா, காட்டுப்பூக்களான உலர்மலர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மலர் வகைகளும் கண்காட்சியில் உள்ளன.




இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  திறப்பு விழாவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ச.தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குநர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கண்காட்சி ஏற்பாடுகளை பூங்கா அலுவலர் அழகேசன் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.



வெறும் மூன்று நாட்கள் என்பதனை மறுபரிசீலனை செய்து விடுமுறை நாட்கள் அதிகமிருப்பதால் மாவட்ட மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணமாக இன்னும் ஒரு வாரக் காலம் நீட்டித்து தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

செய்தி: திரு. ஷேக் அப்துல்லாஹ், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)