முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 30, 2015

ராணுவ மரியாதையுடன் மக்கள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

No comments :
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெற்றது

பின்னர் அங்கிருந்து உடல் அடக்கம் செய்யப்படும் பேக்கரும்பு பகுதிக்கு ராணுவ வாகனத்தில் கலாம்  உடல் வந்தடைந்தது.

அங்கு, அப்துல்கலாம் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


இதைத்தொடர்ந்து, கலாம் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், கலாமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் பேக்கரும்பில் அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Wednesday, July 29, 2015

கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை?!!

No comments :
கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முஹம்மது காசிம் (33). இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.



ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

எனவே, மனைவியை ஏமாற்றுவதற்காக திங்கள்கிழமை இரவு விளையாட்டாக தூக்கு மாட்டியவர் அதில் சிக்கி உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை காலை பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.  இது குறித்து, காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி


முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் காலம் மறைவிற்கு மஹாராஜா சில்க்ஸ் புகழஞ்சலி!!

No comments :
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் காலம் மறைவிற்கு மஹாராஜா சில்க்ஸ் புக்ழஞ்சலி!!






கீழக்கரை வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார், இருவரி கைது செய்யப்பட்டனர்!!

No comments :
கீழக்கரையைச் சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25) என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். முன்விரோதம் காரணமகா கை(எ) முஹம்மது கான்(வயது-26), முஹம்மது ஆதம் ஆகிய இருவர் குத்தியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

சேர்ந்த திப்பு சுல்தான் (வயது-25)

கை(எ) முஹம்மது கான்(வயது-26


இதில் கை(எ) முஹம்மது கான் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதானவர் என்று தெரியவந்துள்ளது.

2 மணி நேரத்துக்குள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள், திரு. மினியாண்டி மறறும் திரு, சிவ சுப்ர்மணியன் ஆகிய இருவரையும் டி.எஸ்.பி. திருமதி.மகேஸ்வரி பாராட்டிட்னார்.


செய்தி: திரு.முஹம்மது சுஐபு, திமுக, கீழக்கரை

பி.இ கவுன்சிலிங் நிறைவுற்றது, 91 ஆயிரம் இடங்கள் காலி!!

No comments :
சென்னையில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 91 ஆயிரம் அரசு இடங்களே காலியாக இருக்கும் நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வந்தது.

2015-16 கல்வியாண்டு கவுன்சிலிங் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது.


பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 1,48,794 பேர் அழைக்கப்பட்டனர்.


இவர்களில் 1,01,620 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதில் 62,970 பேர் மாணவர்கள், 38,650 பேர் மாணவிகள்.

அழைக்கப்பட்டவர்களில் 46,571 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். 603 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

அதே நேரத்தில் சுமார் 91 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. அரசு என்ஜினீயரி்ங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களாகும் இவை. இவை அனைத்துமே அரசு ஒதுக்கீட்டின் கீழே கொடுக்கப்பட்ட இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அதிக மவுசு இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலே போதும். நல்ல வேலை கிடைத்துவிடும் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால் உலகப் பொருளாதார அளவில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக என்ஜீனியரிங் படிப்புகளுக்கு தற்போது மவுசு குறைந்துள்ளது. அதனால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

சில கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பாத நிலை உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை, தரவரிசையில் பின்தங்கிய நிலை போன்றவற்றால் இந்தக் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை என்றார் அவர்.

நன்றி: ஒன் இண்டியா

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை இராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது, நாளை நல்லடக்கம்!!

No comments :
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

84 வயதான அப்துல் கலாம் நேற்று முன்தினம் காலமானார். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க், கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கலாமின் உடலை சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில்,
ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணிக்கு கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது.

நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதால் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.

 

Tuesday, July 28, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவு, சொந்த ஊர் ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய கோரிக்கை!!

No comments :
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாரடைப்பால் நேற்றிரவு காலமான முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் ராணுவ ஹெலிகாப்டரில் ஷில்லாங்கிலிருந்து, அசாம் மாநிலம் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி வந்து கொண்டிருக்கின்றது.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவு செய்தியை அறிந்த ராமேஸ்வரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கலாமின் இறுதி முகத்தைக் கூட காண முடியாதா என்ற ஏக்கத்தில் ராமேஸ்வரம் மக்கள் தவித்து வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்களின் உயிர் துடிப்பாக இருந்து, ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற எங்கள் மண்ணின் மைந்தர் இறந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு சேவை செய்த மாபெரும் விஞ்ஞானியை இழந்தது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது உடலை ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அவரது கடைசி முகத்தை காண இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் காத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

முகவை முரசு சர்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

Monday, July 27, 2015

ராமநாதபுர மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்வு!!

No comments :
ராமநாதபுரத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு மே 23, 24 தேதிகளில் நடந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான முடிவுகளின் படி ராமநாதபுரத்தில் 8 பெண் உள்பட 27 பேர் தேர்வாகியுள்ளனர்.


ராமநாதபுரம் சப் டிவிஷனில் 4,
முதுகுளத்தூர், கீழக்கரையில் தலா 6,
கமுதி, திருவாடானையில் 2,
பரமக்குடி சப் டிவிஷன், ஆயுதப்படை, கமுதி அதிரடிப்படை, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவுகளில் தலா ஒருவர் தேர்ச்சி பெற்றனர்.

பொதுப்பிரிவில் 5 பேரும், விளையாட்டு பிரிவில் 2 பேரும், போலீஸ் ஒதுக்கீட்டில் 20 பேரும் இடம் பிடித்தனர்.

செய்தி: தினசரிகள்

வெற்றி பெற்றவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!!

No comments :
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பிற்கு புத்தக நிதி, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் கல்வி, உடற்கல்வி பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்திற்கு
செயலாளர்,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ.எண் 718,
தேனாம்பேட்டை,
சென்னை 8


என்ற முகவரிக்கு சுய முகவரியிட்ட தபால் தலை ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப அக்டோபர் 31 கடைசி நாள் ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 9525 பங்கு கொண்டனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 9525 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 1241 காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12,079 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 1433 பேரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 1121 பேரும் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து மீதம் உள்ள 9525 பேர் இந்தத் தேர்வை எழுதினர். மாவட்டம் முழுவதும் 38 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி அக்பர்அலி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பதற்றமான மையமாக கருதப்பட்டு அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெறுவதை 6 பறக்கும் படையினரும், 9 நடமாடும் படையினரும் தீவிரமாக கண்காணித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்தி: தினசரிகள்


Sunday, July 26, 2015

துபாய் Al Noor Hospitals குழுமத்தில் Site Engineerவேலை வாய்ப்பு!!

No comments :

Site Engineer

Al Noor Hospitals Group

Dubai, UAE

Posted 6 days ago 
Ref: OP834-70









The Role

- Act as project/Site supervisor on construction and renovation projects
- Monitor projects to ensure compliance with building codes and regulations
- Coordinate with various contractors to ensure work meets specified standards, timeframes and deadlines
- Develop scope of work for projects and tasks where required
- Provide instruction to contractors and servicemen as required.
- Act as liaison with contractors, oversee their performance and coordinate their services.
- Prepare regular site visit and work progress reports and report variances immediately
- Maintains safe, secure, and healthy work environment by following and enforcing safety standards 
- Ensure the site is kept in a neat and tidy condition at all times
- Maintain all survey and as construction records on site
- Coordinate the activities of all subcontractors by regular briefings and checks
- Assist the Project Manager in the formulation of overall work program and programs for each project site


Requirements

- Diploma in Mechanical/Civil Engineering
- Three to five year project supervisor work experience
- Experience in the supervising of construction projects and monitoring of construction contracts
- Good communication and interpersonal skills. Must be able to communicate in Arabic
- Good writing ability and organizational skills.
- Good computer skills with proficiency using Microsoft Project, Excel, Outlook and Word
- AutoCAD experience a plus

About the Company

Founded in 1985, Al Noor Hospital provides a complete continuum of healthcare and has places itself among the Leading private hospital services provider in Abu Dhabi. Relocation of Al Noor Hospital to Khalifa Street in 1999, Al Noor Khalifa Branch was launched in the year 2001.
In 2006, Al Noor Hospital was established in Al Ain followed by the inauguration of its unique, purpose-built hospital at Airport Road in 2008. The hospital soon evolved into a state-of-the-art healthcare provider, employing experienced medical professionals and the latest facilities. It has since achieved remarkable progress in the healthcare industry and has recently expanded to Abu Dhabis Western region, opening specialized clinics in Madinat Zayed, Mirfa and Mussafah, offering medical services as well as emergency referrals to its Abu Dhabi branches.
TO APPLY: CLICK HERE

சவுதிஅரேபியாவில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம், மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிவிப்பு!!

No comments :
சவுதிஅரேபியா அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமுள்ள அலோபதி டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அலோபதி டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு புதுடில்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் வருகிற 27–ந்தேதி முதல் ஆகஸ்டு 5–ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட சிறப்பு கண்சல்டண்ட் டாக்டர்கள், மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட ரெசிடெண்ட் டாக்டர்கள், 40 வயதிற்கு உட்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.



தேர்ந்தெடுக்கப்படும் ரெசிடெண்ட் டாக்டர்கள் வளரும் நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.75,000 முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், சிறப்பு டாக்டர்கள் முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 20 ஆயிரமும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று அனுபவத்திற்கேற்ப ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், கண்சல்டண்ட் டாக்டர்களுக்கு முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 24 ஆயிரம் வரையிலும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 26 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.


மேலும் இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவுதிஅரேபியா அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை 044–22502267, 22505886, 08220634389 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இணையதள முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பிலான புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.53 லட்சம் மதிப்பிலான புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவினை அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

அடிப்படை வசதி:

ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புதிதாக ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவினை பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா முன்னிலையில் அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு இணையான ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக இந்த ஆஸ்பத்திரியில் ரத்தம் பகுப்பாய்வு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த பகுப்பாய்வுப் பிரிவில் தளவாட சாமான்களுக்காக ரூ.50 லட்சமும், உள்கட்டமைப்பிற்காக ரூ. 3 லட்சமும் ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.53 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு கொடையாளியிடம் இருந்து பெறும் 350 மி.லி ரத்தத்தின் மூலம் 3 நோயாளிகளின் உயிரை காக்கமுடியும். இந்த ரத்த வங்கியில் ரத்தம் மட்டுமல்லாமல் ரத்தத்தின் கூறுகளான சிவப்பணுக்கள், ரத்தத்தட்டு அணுக்கள் மற்றும் ரத்த வடிநீர் தனித்தனியாக கிடைக்கும். 


இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட சிவப்பணுக்களால் ரத்தசோகை, சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பேறுகால ரத்த இழப்பு போன்ற நோய்களுக்கும், ரத்த தட்டு அணுக்களால் ரத்தப்போக்கு அதிகமாக உள்ள நோயாளிகளும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள், ரத்த வடிநீர் உபயோகத்தால் தீக்காயம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், புரத குறைபாடு உள்ள நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், பாம்புக்கடி நோயாளிகள் மற்றும் ரத்தப்போக்கு நோயாளிகளும் பயன்பெறுவார்கள். இந்த பிரிவிற்கென நமது மருத்துவர்களும், ஆய்வக உதவியாளர்களும் ஒரு மாதம் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சி ஏற்பாடு:

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, அவைத்தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகரசபை தலைவர்கள் சந்தானலெட்சுமி,அர்ச்சுனன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வரதன், மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ், கண்காணிப்பாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஜவஹர்லால், ரத்தவங்கி மருத்துவர் டாக்டர் ஷேக்அப்துல்லா, சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக்அலி, உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக ரத்த பகுப்பாய்வு எந்திர தெடாக்கவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் கீழக் கரை முகமது சதக் பாலி டெக்னிக் மாணவர்கள் 50 பேர் ரத்ததானம் செய்தனர். ரோட்ராக்ட் பொறுப்பாசி ரியர் பாலசுப்பிர மணியன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா மற்றும் ரத்ததான முகாம் அமைப்பின் ஆசிரியர் அய்யப்பன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

Saturday, July 25, 2015

தேவிபட்டினம் அல் அக்ஸா பள்ளிவாசல் திறப்புவிழா!!

No comments :
தேவிபட்டினம் அல் அக்ஸா பள்ளிவாசல் திறப்புவிழா இன்று நடைபெறுகிறது.




செய்தி: திரு.ஹிதாயத்

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்கியது, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :
மதுரை ராமநாதபுரம் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது!


மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை-ராமநாதபுரம் இடையே சுமார் 115 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதில், மதுரை-பரமக்குடி இடையே நான்கு வழிச் சாலையாகவும், பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 10 மீட்டர் அகலச் சாலையாகவும் அமைக்கப்படும். ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைக்கிறது.

மதுரை விரகனூர் பகுதியில் தொடங்கி ராமநாதபுரம் வரை 115 கி.மீ-க்கு இந்தச் சாலை அமைக்கப்படுகிறது.
இதில், 40 புறவழிச் சாலைகள், 9 ரயில்வே மேம்பாலங்கள் அமைய உள்ளன.

இந்த நான்கு வழிச் சாலை மதுரை விரகனூரில் சுற்றுச் சாலை சந்திப்பில் இருந்து புறவழிச் சாலையாக 8 கி.மீ.-க்கு அமைக்கப்பட்டு சிலைமான் பகுதியில் இணைகிறது. அதைத் தொடர்ந்து திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, காட்டு பரமக்குடி உள்பட ராமநாதபுரம் வரை 40 புறவழிச் சாலைகள் அமைகின்றன.

இந்த சாலைக்கு ரூ.1,387 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.


இதற்கான பணிகள் துவங்கி சாலைகள் இருபுறமும் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு அகலப்படுத்தும் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.