முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 25, 2016

பெரியபட்டிணத்தில் தீ விபத்து, நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து சேதம்!!

No comments :
பெரியபட்டிணம் புதுக்குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து சேதமாகின.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரியபட்டிணம் அருகே புதுக்குடியிருப்பு பகுதியில் ஜமாலுதீன், செய்யது இப்ராஹிம், கலீல்ரகுமான் உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான இடத்தில் பனை,தென்னை, சவுக்கு மரங்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இப்பகுதியில் புதன்கிழமை காலை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அனைத்து மரங்களுக்கும் தீ பரவியது.  தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 300 சவுக்கு,225 தென்னை,55 பனை மரங்கள் சேதமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  வழிப்போக்கர்கள் யாரேனும் ஒருவர் காய்ந்து கிடந்த பனை ஓலைகளில் சிகரெட் தீயை தூக்கிப்போட்டதால் மரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை கீழக்கரை தனி வட்டாட்சியர் .தர்மர், துணை வட்டாட்சியர் மாதவன், வருவாய் ஆய்வாளர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)