முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 31, 2017

GSTக்கு எதிர்ப்பு : ராமநாதபுர மாவட்ட ஓட்டல்கள், மருந்துகடைகள் முழுஅடைப்பு, சுற்றுலா பயணிகள் அவதி!!

No comments :

மத்திய அரசு ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புதிய சேவை வரியால் உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலைவாசி கடுமையாக உயரும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சேவை வரி உயர்வினை ரத்து செய்யக்கோரி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு செய்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்புராம், நகர் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பு ஆகியோர் கூறியதாவது:

புதிய சேவை வரி உயர்வினால் உணவு பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வரி உயர்வு என்பது முழுமையாக மக்களின் மேல் சுமத்துவதாகும்.

அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கும் பொதுமக்களின் நலனுக்காக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. மக்களின் நலன்கருதி புதிய சேவை வரி உயர்வினை அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்காக ராமநாதபுரத்தில் 162 ஓட்டல், பேக்கரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 780 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர் கூறினர்.இதேபோல, மத்திய அரசு மருந்து விற்பனையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி வழங்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தினை அனுமதிக்காமல் தடைவிதிக்க வலியுறுத்தி அனைத்து மருந்துகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குப்தா கோவிந்தராஜ் கூறியதாவது:மனிதனின் உயிர்காக்கும் மருந்து விற்பனை என்பது சம்பந்தப்பட்ட டாக்டரின் பரிந்துரையின்படி மருந்தாளுனர் மேற்பார்வையில் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் என்று வந்துவிட்டால் குளிர்பதன நிலையில் இருந்து எடுத்து பார்சலில் வரும் காலநேரத்தில் அந்த மருந்தின் வீரியம் குறைந்து மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மருந்துகடைகள்

மேலும், மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வினியோகம் செய்ய கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்த நிலை மாறி யார் வேண்டுமானாலும் எந்த மருந்தையும், எவ்வளவு அளவும் வாங்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இது மனிதனின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்திவிடும். சில மருந்துகள் அதிகமாக பயன்படுத்தும்போது போதை ஏற்படுத்திவிடும். இந்த மருந்துகளை இளைஞர்கள் ஆன்லைனில் பெற்று வழிதவறி செல்ல வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

மருந்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தி மருந்துகள் விற்பனை செய்வதால் அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். எனவே, ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடைவிதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 மருந்துகடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, May 29, 2017

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி வகுப்புகள் ஜூலை முதல் துவங்குகிறது!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம் புதிய அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மணிகண்டன் மாவட்ட கலெக்டர் நடராஜனுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு அவருடைய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக்கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த சட்டக்கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கையை முதல்அமைச்சரிடம் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு சட்டக்கல்லூரி 2017–18–ம் கல்வியாண்டில் தொடங்க முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்த புதிய அரசு சட்டக்கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், நூலக புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ.2 கோடியே 27 லட்சம் செலவினம் ஏற்படும். இப்புதிய சட்டக்கல்லூரியில் 2017–18–ம் கல்வியாண்டில் 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் படிக்கும் வகையில் சேர்க்கை நடைபெறும். இப்புதிய சட்டக்கல்லூரி நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தனி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுஉள்ளார்.

புதிய அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் புதிய சட்டக்கல்லூரிக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தற்காலிக இடம் தேர்வு செய்து சட்டக்கல்லூரி நடத்தப்படும்.

ஜூலை முதல் வாரத்தில் சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்கும். அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய சட்டக்கல்லூரி அறிவித்த முதல்அமைச்சருக்கு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பேபி, ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, May 25, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவுபொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா!!

No comments :


ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் விலைபட்டியலில் உள்ளதை விட உணவுபொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள நிலையில் சென்னைதிருச்சிமதுரைராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர்.
இதனால் கூட்டம் அதிகமான நேரங்களில் ரயில் வரும் வரை பயணிகள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. மழை காலங்களில் வெளியிலும் நிற்க முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் 2, 3வது பிளாட்பாரங்களில் மின்விளக்குகள் எரிவது கிடையாது. இதனால் இரவில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் ரயில்வே கேண்டீனில் உணவுபொருட்களும் நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலைபட்டியலில் ரூ.5 க்கு டீ கிடைக்கும் என எழுதிவைத்து விட்டு பயணிகளிடம் ரூ.7 கேட்கின்றனர். ரூ.12க்கு 2 இட்லி என இருந்தும் ரூ.15 கேட்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டால் விருப்பம் இருந்தால் வாங்குங்கள், இல்லையென்றால் வேண்டாம் என்று கடைஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயிலில் செல்லும் பயணிகளும் மானாமதுரையை அடுத்து எந்த ரயில் நிலையத்திலும் உணவு பொருட்கள் இல்லாததால் வேறுவழியில்லாமல் கூடுதல் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். ரயில்வே உயர் அதிகாரிகள் ரயில்நிலையத்தில் நடைபெறும் இதுபோன்ற செயல்களை அவ்வப்போது ஆய்வு செய்தால்தான் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என பயணிகள் தெரிவித்தனர்.

ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...............


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, May 24, 2017

குரூப் 2 ஏ தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள் மே-26!!

No comments :

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 27ந் தேதி முதல் மே 26ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தனி எழுத்தர்பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குரூப் 2ஏ தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பிக்கவும். மேலும் குரூப் 2ஏ தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.

குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவர். எனவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள்..

தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது.

உடனே விண்ணப்பியுங்கள் உங்கள் அரசு வேலை கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்களுடன் உங்கள் முகவை முரசு!!


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, May 23, 2017

பிளஸ்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!!

No comments :
பிளஸ்-தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 200 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதை 100 மதிப் பெண்ணாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி பாடத்துக்கான மொத்த மதிப்பெண் 1,200-க்கு பதிலாக இனி 600 ஆக இருக்கும்.

இந்த 100 மார்க்குகளில் 90 மதிப்பெண் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள 10 மதிப்பெண் பொது அறிவு சம்பந்தமானது. ஆப்ஜெக்டிவ்’ டைப்பில் கேள்விகள் இருக்கும். 

நீட் மற்றும் தகுதி தேர்வில் மாணவ- மாணவிகளின் தகுதி திறனை அதிகரித்துக் கொள்ள இந்த 10 மதிப்பெண் பாடப் புத்தகத்தில் இல்லாமல் வெளியில் இருந்து பொது அறிவாக கேட்கப்படும்.பிளஸ்-2வில் உள்ள தேர்வு முறை போல பிளஸ்-1  தேர்விலும் பின்பற்றப்படும்.
மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படும் போது மாணவ - மாணவிகளுக்கு மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

மார்க்குகள் பாதியாக குறைக்கப்படுவது போல தேர்வு நேரத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிளஸ்-2 தேர்வு நேரம் 3 மணி என்பது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட இருக்கிறது.

மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய இரண்டு வகுப்புகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் மதிப்பெண்ணை சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதே முறையை மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளில் உள்ள மார்க்குகள் கணக்கிடப்பட்டு ஒரே மதிப்பெண் சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, May 21, 2017

10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் 3வது இடம்!!

No comments :


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள், மாணவ-மாணவிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் பாராட்டினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,979 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். இதில் 17,648 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 98.16 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இத்தகைய முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்த ஆசிரிய-ஆசிரியர்களையும், மாணவ-மாணவிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.தேர்வு வைக்கப்பட்ட பாடங்களுக்கு அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் தலைமை ஆசிரியரால் இப்பணி ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கும் மாதத்திற்கு நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

வினா தொகுப்பு

முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வு, 2-ம் பருவத்தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் முதல் திருப்புதல் தேர்வு ஆகியவை முடிந்த பின்னர் ஆலோசனை கூட்டம் பாட ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் அடைந்தது. பாட ஆசிரியர்களால் ஒரு மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ச்சியில் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்தனர்.

மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் வழங்கப்பட்ட வினா தொகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளின் பயனால் தான் மாநிலத்தில் 3-வது பிடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் ராமர், பரமக்குடி பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: தினத்தந்தி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, May 17, 2017

பாம்பன், தொண்டி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் மதுபான கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை!!

No comments :
பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபான கடைகளையும் அகற்ற வலியுறுத்தி பெண்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மீனவ மகளிர் அமைப்பின் சார்பில் பாம்பன் நகர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு மோட்சராக்கினி தலைமை வகித்தார். மீனவ மகளிர் அமைப்பு தலைவி இருதயமேரி, ஜெபமாலை முன்னிலை வகித்தனர்.

மாதர்சங்க பொருளாளர் மேரிடெய்சி, உலகம்மாள், மனோகரி, எமரென்சியா, நிர்மலா, முத்துநம்பு, உலகம்மாள், மரியசாந்தி உட்பட பலர் பேசினர். பாம்பன் வாழும் ஏழை மீனவ மக்களின் நலன் கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபானக்கடைகளையும் அகற்றவும்,


ராமேஸ்வரம் தீவுப்பகுதியை மதுஇல்லாத பகுதியாக அறிவிக்க அரசும், மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதுபோல் தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதை உடன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குடிமகன்களின் தொல்லை குடியிருப்பு பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று காலை சுற்றுவட்டார கிராம மக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கடையை அடைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென பெண்கள் கடையை உடைக்க முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார், தாசில்தார் தாமஸ், டாஸ்மாக் மண்டல மேலாளர் வடமலை ஆகியோர் கிராமத்திற்கு ஒருவர் என அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


டாஸ்மாக் மேலாளர் வடமலை கூறும்போது, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள இந்த கடையை ஒரு வாரத்தில் அகற்றிவிட முடிவு செய்துள்ளோம். மாற்று இடம் தேர்வு செய்து விட்டு உடன் கடையை அடைத்துவிடுவோம் என்றார்.

இது போல சக்கரக்கோட்டையிலும் மதுபானகடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடனுதவி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும்சுயதொழில் செய்பவர்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு ஏதுமில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக ரூ.25 லட்சமும்சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலும் மற்றும் சேவை தொழில்களுக்கு திட்டத் தொகை ரூ.லட்சத்திற்கு மேலும் இருப்பின் அத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி பெறவிரும்புவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன் பெறலாம்.

தனிநபர் தொழில் முனைவோர்கள்உற்பத்தி கூட்டுறவுசங்கங்கள்சுய உதவிக் குழுக்கள்அறக்கட்டளைகள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டகடன் தொகையில் 15 சதவிகிதமும்ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 25 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்சிறுபான்மையினர்மகளிர்முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டு தொகையில் 25 சதவித மானியமும்ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 35 சதவித மானியமும் வழங்கப்படும்.
தென்னை, நார், கயிறு மற்றும் கயிறு, துகள் கட்டிகள், முந்திரி பதப்படுத்துதல், சிறுதானியங்களிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரிப்பு, கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப்பொருட்கள் தயாரிப்பு, அயோடின் உப்பு தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, ஹலோபிளாக் தயாரித்தல், பிளே ஆஸ் செங்கல் தயாரித்தல், கருவேல மரத்தூள்கலிருந்து தயாரிக்கப்படும் எரிப்பொருள் கட்டி தயாரித்தல், பிவிசி பைப் தயாரித்தல்,நோட்டு புத்தங்கள் தயாரித்தல், அட்டைப்பெட்டிகள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், டிஜிட்டல் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், அழகுநிலையம், உலர் சலவையகம், வீல் அலையன்மெண்ட் போன்ற தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.

ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டதொழில் மையஅலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். தொலைபேசிஎண்;. 04567 -230497. www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, விண்ணப்ப நகலை மாவட்டதொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு, தற்காலிக டிரைவர்கள் வைத்து சரி செய்ய முயற்சி!!

No comments :
தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் பஸ்போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் மாலை நேரத்திற்கு பின்னர் நிலைமை மோசமாக இருந்தது. இந்தநிலையில் அரசு மேற்கொண்ட மாற்று நடவடிக்கையின் பயனாக அனைத்து பகுதிகளிலும் தற்காலிக (மாற்று) டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜனுடன் இணைந்து புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசை கண்டித்தும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, May 14, 2017

ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவுக்கு உட்பட்ட 400 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது.
முதல் நாளான நேற்று பெருங்குளம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தேர்போகி, குயவன்குடி, வாலாந்தரவை, கும்பரம், காரான், ரெட்டையூருணி, பெருங்குளம், அழகன்குளம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. இத்தணிக்கை முகாமில் நில அளவை கருவிகள் சரியான நிலையில் உள்ளதா? என்பது குறித்தும், வருவாய் கிராம கணக்குகள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.


மேலும் இந்த தணிக்கையின் போது மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கையின் போதே 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 9 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் வழங்கினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பொறியியல் படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கீழக்கரை கல்லூரியில் இலவச முகாம்!!

No comments :

அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இலவச சேவையை கல்லூரி இயக்குநர் ஹாமீது இபுராகிம்,முதல்வர் அப்பார்முகைதின் முன்னிலையில் சேர்மன்முகமது யூசுப் துவங்கி வைத்தார்.சேர்மன் முகமது யூசுப் கூறுகையில், பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி விண்ணப்பிக்க எங்களது கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்ட உள்ளனர்.

மேலும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு கல்லூரி பேருந்துகள் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், ரயில்வே கேட்டிலிருந்து மே 30ம் தேதி வரை காலை 8.30 மணியளவில் புறப்படும். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, May 13, 2017

பிளஸ் 2 தேர்வில் 2 ஆம் இடத்தைப் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் சாதனை!!

No comments :
பிளஸ் 2 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 2 ஆம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

முதல் இடத்தை விருதுநகர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை ஈரோடு மாஅவட்டமும் பெற்றது.


வாழ்த்துக்கள் மாணவச்செல்வங்களே....


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Friday, May 12, 2017

தபால் அலுவலகத்தில் இருக்கும் 9 சேமிப்புத் திட்டங்கள்!!

No comments :
தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியது. உலகிலேயே அதிக கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் என்ற பெயரும் அஞ்சல் அலுவலகத்திற்கு உரிய ஒரு பெருமையாகும்.

இப்போது அஞ்சல் அலுவலகங்களில் 9 சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கைப் போன்றதே. இந்தக் கணக்குகளில் பணத்தை எளிதாக வைக்கலாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கை துவங்கக் குறைந்தபட்சம் 20 ரூபாய் கணக்கில் வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளாகவும் இந்தக் கணக்கை திறந்து கொள்ளலாம். இந்தக் கணக்கில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வருடத்திற்கு 4 சதவீதம் வரை லாபம் பெறலாம். 500 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்து கணக்கை துவங்குபவர்களுக்கு செக் புக் அம்சமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் பெறும் 10,000 ரூபாய் வரையிலான லாபத்திற்கு 2012-2013 நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்த தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5
வருட அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டம்

5 வருட அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 2016 ஏப்ரல் மாதம் முதல் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 7.4 சதவீதம் வரை லாபம் பெறலாம். தொடர் வைப்பு நிதி திட்டமான இதில் குறைந்தது மாதம் 10 ரூபாய் முதல் முதலீடு செய்துவரலாம். உங்கள் பள்ளி குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சேமிப்பை கற்றுத் தர இது ஒரு சிறந்த திட்டமாகும்.

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும். 1 வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும், 2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.

தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (MIS)

தபால் அலுவலகத்தின் மாத வருமான திட்ட கணக்கின் மூலம் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் நீங்கள் செலுத்தி வரும் தொகைக்கு 7.80 சதவீதம் வரை லாபம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது தனிநபராக இருந்தால் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாய் வரையும், அதுவே கூட்டு கணக்கு திட்டமாக இருந்தால் 9 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம். மாத வருமான திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 10 வயதைக் கடந்து இருக்க வேண்டும்.

15
வருட பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு தபால்

அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. பிரிவு 80சி-இன் கீழ் இத்திட்டம் மூலம் நீங்கள் பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.

தேசிய சேமிப்பு பத்திரம்

அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் வங்கிகளை விடச் சிறிது அதிகமான வட்டியைப் பெறலாம். பொதுத் துறை வங்கிகளை விடக் குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம். 8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.  

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு பிரபலமான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம். அதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் பிரிவு 80சி-இன் கீழ் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.

கிசான் விக்காஸ் பத்ரா

கிசான் விக்காஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு இல்லாததால் பெரும்பாலம் யாரும் இத்திட்டத்தை விரும்புவதில்லை. ஆனால் இத்திட்டத்தில் 110 மாதங்கள் அதாவது 9 வருடம் 2 மாதங்கள் வரை நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்கள் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும்.

செல்வ மகள் திட்டம்
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, May 11, 2017

நாளை பிளஸ்-2 தேர்வு முடிவுகள, வெளியிடும் இணையதளங்கள் விபரம்!!

No comments :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. இந்த ரிசல்ட்டை எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு முடிவை அனைவரும் இந்த 3 இணையதளங்கள் மூலமாக பார்க்கலாம்.


2-
ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் 15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)