முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 24, 2015

கீழக்கரை நகராட்சியை கண்டித்து தி.மு.க ஆர்பாட்டம்!!

No comments :
  
கீழக்கரையில். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று 24.11.15 இந்து பஜாரில் தி.மு.க ஆர்பாட்டம் நடைபெற்றது.



இதில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன்,தலைமையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலையில் மற்றும் நகர் செயலாளர் பஷீர் அகமது,NPK கென்னடி ஆகியோர் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை SI சிவசுப்பிரமணியன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திரு. தாஹிர், கீழக்கரை


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது!!

No comments :
ராமேசுவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம், முத்துராமலிங்கத்தேவர் பகுதியில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி மனைவி வள்ளி (46). இவர் வீட்டில் கஞ்சாவை மறைத்துவைத்து விற்பனை செய்து வருவதாக ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.


அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு போலீஸார் சென்று அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து வள்ளியை கைது செய்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர்வாடி தர்காவில் செயல்படுத்தப்பட்டு றைநம்பிக்கையோடு கூடிய மருத்துவ முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசுக்கு பரிந்துரை!!

No comments :
ஏர்வாடி தர்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் இறைநம்பிக்கையோடு கூடிய மருத்துவ முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த அரசுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் டி.முருகேசன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் உள்ள மனநோயாளிகள் தங்கும் இடங்கள், தர்கா வளாகத்தில் உள்ள மனநல மருத்துவமனை, புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை ஆகியவற்றை திங்கள்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது:
 ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனையுடன் கூடிய மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதனால் மனநோயாளிகள் விரைவில் குணமாகின்றனர். இந்த மருத்துவ முறையை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த பரிசீலனை செய்து வருகிறோம்.
மனநோயாளிகளை பாதுகாக்க வேண்டும்: சாலைகளில் அனாதையாக மனநோயாளிகள் சுற்றித் திரிவது தெரியவந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களை காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் காப்பகங்களுக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அனுப்பிவைக்க வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் அவர்.


இந்தியாவில் 3 சதவீதம் பேருக்கு மனநோய்:   மாவட்ட மனநலத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மனநல மருத்துவருமான சி.ராமசுப்பிரமணியன் கூறுகையில்,  இந்தியாவில் 3 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்வாடியில் மனநோயாளிகளுக்காக ரூ.8 கோடியில் புதிதாக 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்.
  தமிழக அரசு மனநோயாளிகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார் அவர்.
ஆய்வின்போது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.அக்பர்அலி, ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சகாயஸ்டீபன்ராஜ், ஏர்வாடி மனநல மருத்துவர் பெரியார்லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக ஏர்வாடி தர்கா நிர்வாகிகள் துல்கருணை பாட்ஷா,முகம்மது செய்யது பாரூக்,செய்யது இஸ்மாயில், ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரை வரவேற்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)