முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 31, 2015

தனி ஒருவன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிப்பு: ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி, தம்பி ராமய்யா, நாசர் ஒளிப்பதிவு: ராம்ஜி
இசை: ஹிப் ஹாப் தமிழா
தயாரிப்பு: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்
எழுத்து - இயக்கம்: மோகன்

ராஜா 'ரீமேக் படங்களின் ராஜா' என சற்று கிண்டலாகவே விளிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக வந்திருக்கிறார். ரீமேக் படமாக இருந்தாலும், அதை நமக்கேற்ற சுவாரஸ்யங்களோடு தர ஒரு தனித் திறமை வேண்டும். அதில் ராஜா நிஜமாகவே கில்லாடிதான். இந்த ஒரிஜினல் தனி ஒருவனிலும் தன்னை ஒரு 'ராஜா'வாக நிரூபித்திருக்கும் அவருக்கு முதல் வாழ்த்து!

சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை. ஒரு ஹீரோ மிளிர வேண்டுமென்றால், அவனுக்கு சமமான வில்லன் வேண்டும் என்பதை உணர்ந்து வில்லனை விஸ்வரூபமெடுக்க வைத்திருக்கும் 'ராஜா பிரதர்ஸின்' தொழில் நேர்மை வியக்க வைக்கிறது.


சமூகத்தில் குற்றம் செய்யும் பலரை, ஐபிஎஸ் பயிற்சி முடித்த ஜெயம் ரவியும் அவர் சகாக்களும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள். ஆனால் மறுநாளே அவர்கள் பல்லைக் காட்டிக் கொண்டு அவர்கள் முன்னே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆக இந்த கிரிமினல்களுக்குப் பின்னணியில் யாரோ ஒரு பெரிய கிரிமினல் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் தேடலைத் தொடங்க, அது அரவிந்த்சாமி என்ற பெரும்புள்ளியில் போய் நிற்கிறது. மருந்துலக மாபியாவாக, பெரும் தொழிலதிபராக, அசைக்க முடியாத அரசியல் செல்வாக்கு மிக்கவராக உள்ள அந்த பெரும் வில்லனோ, ஜெயம் ரவியின் ஒவ்வொரு அசைவையும் விரல் நுனியில் வைத்து விளையாடுகிறார். இந்த ஹீரோ - வில்லன் துரத்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத புத்திசாலித்தனமான க்ளைமாக்ஸ்!

ஹீரோ ஜெயம் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோமியோவிலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக ஜிவ்வென உயர்ந்திருக்கிறார். ரசிகர்கள் நம்பும்படியான ஆக்ஷன், க்ளோசப்பிலும் உறுத்தாத ஆண்மைத்தனம் மிக்க அழகு, காதல் காட்சிகளில் அசட்டுத்தனமில்லாத நடிப்பு... மயங்க வைக்கிறார் மனிதர். தமிழ் சினிமாவில் இன்றைய ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு இணையான அழகும், திறனும் மிக்கவர் யாருமில்லை எனும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்கிறார் இந்தப் படத்தில்.

ஜெயம் ரவிக்கு நிகரான.. சில இடங்களில் அவரையும் பின்னுக்குத் தள்ளும் வலுவான பாத்திரத்தில் அர்விந்த்சாமி. ஹீரோவாக நடித்த போது இவரைப் பிடிக்காதவர்களுக்கும் இப்போது பிடிக்கும் அளவுக்கு அலட்டலில்லாத, மிரட்டல் நடிப்பு. காதலியையும் தந்தையும் கொல்லச் சொல்லி அவர் உத்தரவிடும் விதம்.. புதுவகை வில்லத்தனம். க்ளைமாக்ஸில் ஹீரோவாகி திட்டிய வாய்களை வாழ்த்த வைக்கிறார்!

நயன்தாராவை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார்கள். ஹீரோ - வில்லனுக்கு இணையாக கலக்கியிருக்கிறார். வில்லன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்... ஆனால் அவனுக்குத் தெரியாமல் காதலைச் சொல்ல வேண்டும் என்ற கட்டத்தில், 'கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாமே..என பலகையில் எழுதும் நயன்தாராவைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்! தம்பி ராமய்யா மாதிரி ஒரு மந்திரி அப்பா தேடினாலும் கிடைக்காத மிகைதான். ஆனால் இந்தக் கதைக்கு அப்படி ஒரு பாத்திரம் தேவைதான். க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் 'பழனி.. அந்த புல்லட் புரூப் உடையைப் போட்டுக்கப்பா' என அவர் தழுதழுக்கும் காட்சி நெகிழ்ச்சி.

நாசர், ஜெயம் ரவியின் சகாக்களாக வரும் ஹரீஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம், ராகுல் மாதவ், ஸ்ரீசரன், அர்விந்த்சாமியின் அடியாளாக வரும் வம்சி என அனைவரையும் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் காப்பாற்ற உதவுகிறது. ஆனால் பாடல்கள் உதவவில்லை. குறிப்பாக அந்த கடைசி டூயட் ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடுகிறது. புதியவராக இருந்தாலும், கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் 'பக்கா'!

எந்தக் குறையையும் ரசிகன் உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை எழுதி, அதில் சிறு சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கும் ராஜா, வசனத்திலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் (சுபாவுடன் இணைந்து). சில படங்களைப் பற்றி எழுதும்போது தொழில்நுட்ப நேர்த்தி என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் உண்மையிலேயே அதற்கு தகுதியான படம் இதுதான் என்பதை, கிராபிக்ஸ் துணை அவ்வளவாக இல்லாமலேயே நிரூபித்திருக்கிறார் ராஜா. தனி ஒருவன்... தனித்துவம் மிக்க படம்!

செய்தி: ஒன் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

துபாய் Al Mulla நிறுவனத்தில் Time Keeper வேலை வாய்ப்பு!!

No comments :
Time Keeper
Al Mulla Group of Companies - Dubai



a Contracting Company is looking for Time Keeper knowledgeable in said position with 5 -10 years experience
Salary 2,200 + accommodation + visa.
Local candidates only:
  • Dubai
Required experience:
  • time keeper: 5 years
TO APPLY: CLICK HERE


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரோட்டராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!!

No comments :
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ரோட்டராக்ட் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. 

புதிய தலைவராக ரூபன் பொறுப்பேற்றார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் பாபு, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். 

முன்னாள் தலைவர் செய்யது மிப்தாவுதீன் வரவேற்றார். 
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் தேர்வு டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பேசும்போது,

‘‘மாணவர்கள் படிக்கும்போதே தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டு சமூக சேவை செய்ய ரோட்ராக்டர் சங்கம் பெரும் உதவியாக இருக்கும்’’ என்றார். ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, துணை ஆளுநர் ரமேஷ்பாபு, வக்கீல்கள் அதிசயபாபு, சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மாரிமுத்து, ரோட்ராக்டர் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர். ரோட்ராக்ட் சங்க செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)



கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம், சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்’ என பெயரிட கோரிக்கை!!

No comments :

சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்என பெயரிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம் நடைபெற்றது. இயக்க தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்; ராமேஸ்வரம்-சென்னைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி ரயில் இயக்க வேண்டும்; மீனவர்கள் நலன் கருதி மீன் பாதுகாப்பாக ரயில்களில் கொண்டு செல்ல குளிர்பதன பிரத்யேக ரயில் பெட்டி அனைத்து ரயில்களிலும் இணைக்க வேண்டும்; பாம்பன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்; 


சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்என்ற பெயரிட வேண்டும்; கீழக்கரை முதல் கேணிக்கரை வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் தற்போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரையே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இந்த பஸ்களை மீண்டும் பழைய வழித்தடப்படி இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இபுராகீம், செய்யது சர்புதீன், கலைச்செல்வம், முகம்மது யூசுப், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சங்கச் செயலாளர் தங்கம் அப்துர்ரஹ்மான் நன்றி கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலை அகலப்படுத்தப்படுகிறது!!

1 comment :
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே சாலையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை உள்ள 55 கிலோ மீட்டர் தூர தேசியநெடுஞ்சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இந்தநிலையில் இந்த சாலை மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த தேசியநெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சாலையை அலப்படுத்துவதற்கான பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ராமநாதபுரம் புறநகர் பகுதி முதல் வழுதூர், பிரப்பன்வலசை, வேதாளை வரையிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 



இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரையிலும் தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக இன்னும் 6 மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும்போக்கு வரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுகாண ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில்வே நிலையம் பின்புறம் வழியாக தனுஷ்கோடி நம்புநாயகி அம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரூ.34 கோடி மதிப்பில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இந்த புறவழிச்சாலையிலேயே மேம்பாலம் அமைத்து ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் மற்றொரு பகுதியில் பஸ் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி சாலையை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ராமேசுவரம் பகுதியில் புறவழிச்சாலை பணிகள் முடியும் பட்சத்தில் பல வருடங்களாக ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, August 30, 2015

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு!!

No comments :
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. 





இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும் 
தமுமுக - மமக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தார்கள். 


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம், கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைக்க ரூபாய் பதினைந்து லட்சம் ஒதுக்கீடு!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சி கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காகராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2012 - 2013 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/1766/2012.
நாள் : - 13.08.2015
செயற்பொறியாளர் , பொதுப்பணித்துறை , கட்டட (க&ப) கோட்டம் , ராமநாதபுரம் , கடித எண், வப/இவஅ/கோ.111/2015/173M / நாள் : 31.07.2015.

செய்தி: இராமநாதபுர  MLA அலுவலகம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நீராதார நிலைகளிலுள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதங்களில் அகற்றப்படும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதத்தில் பொதுப்பணித்துறையினரால் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஹரிவாசன், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் மதியழகன்  உள்ளிட்ட வேளாண்துறை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் 72 கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழாந்தூர் பாலகிருஷ்ணன், ‘‘கடந்த 2013-14ம் ஆண்டில் மழை பொய்து விவசாயம் இல்லாமல் போனது. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள புஞ்சை நிலங்களில் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் காட்டுக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

பரமக்குடி வட்டார விவசாயி கண்ணப்பன், ‘‘மூவாயிரம் ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்படும் முண்டு(குண்டு) மிளகாய் சீஷனில் நாற்றுச்செடி கிடைக்காமல் அவதிப்படுகிறோம். நாற்றுச் செடிகளுக்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், ‘‘முண்டுமிளகாய் வேளாண்மைத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை. சம்பா மிளகாய் நாற்று வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறோம்’’ என்றார்.
பெரியகண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலசுந்தரமூர்த்தி, ‘‘பெரியகண்மாய் மற்றும் வரத்துகால்வாய்கள் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கலெக்டர், ‘‘பொதுப்பணித்துறையினர் ஒரு மாதத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துகால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற உள்ளனர்’’ என்றார்.   களத்தாவூர் சுந்தர்ராஜன், ‘‘கமுதி தாலுகாவில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.கலெக்டர், ‘‘நிலம் கையகப்படுத்துவதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை. தனிநபர், தனிநபர்களிடம் நிலத்தை வாங்குகிறார். இதில் அரசுக்கு சம்பந்தமில்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இட ஆக்கிரமிப்பு விவகாரம், 6 வார காலத்துக்குள் வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

No comments :
ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் அபகரித்தது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை 6 வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள முகைதீன ஆண்டவர் பள்ளிவாசலுக்கு காலி இடத்தை, கடந்த 31.5.1999 இல் அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகி சீனிப்புலவர், அம்பலம் சீனிமுகம்மது, மல்லாரி முகைதீன் அபுபக்கர், பாவா பக்ருதீன் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்த ஷாஷகான் மனைவி மகபூபாவும் மற்றும் ராமநாதபுரம் பட்டினம்காத்தானைச் சேர்ந்த முகம்மது யூசுப் மனைவி சலிகா பீவியும் தானம் செய்துள்ளனர்.


அந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அப்துல் சுக்கூர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த சீனிமுகம்மது மகன் அன்வர் (60) என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராமநாதபுரம வக்பு வாரிய செயலருக்கும், திருவாடானை வட்டாசியருக்கும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 

எனவே அவர், மதுரை உயர் நீமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 6 வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சென்னை வக்பு வாரிய முதன்மைச் செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், திருவாடானை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)


Saturday, August 29, 2015

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை சந்தித்து குறை கேட்பு!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் தொகுதி ஆய்வின்போது பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள் ! 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி ஆய்வு நடைபெற்றது . அதுசமயம் பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி வெளிப்பட்டணம் 15 வது வார்டில் உள்ள கொல்லன் பட்டறைத்தெரு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் தெரு முனையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை இடம்மாற்றக்கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கைமனு அளிக்கப்பட்டுள்ளது.



பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி. மாநில தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது சித்திக்மூத்த நிர்வாகி பாக்கர் அலி, செயலாளர் பிஸ்மி, மாணவரணி செயலாளர் புர்க்கான் அலி, மன்சூர், சக்கரக்கோட்டை ருகைபு, ஆற்றங்கரை மமக செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் நகர் கிளை நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரின் செயலாளர் தாஹிர் சைபுதீன் உடன் இருந்தனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சிறுபான்மையின மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை!!

No comments :

சிறுபான்மையின பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கல்வியில் சிறந்து விளங்கும் வசதியின்றி கல்வியினைத் தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டிற்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கு தமிழகத்திற்கு 1,707 சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


தகுதிகள்: 

10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பு கல்வி ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். 

சேர்க்கை அனுமதிச்சீட்டு கடித நகல் இணைக்க வேண்டும். 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வருமானச் சான்று அல்லது ஓய்வூதியம் ஆணை அல்லது ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விபரங்கள் www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் 2 உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

கல்வி நிலைய தலைமையாசிரியர் அல்லது தாளாளர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து பெற்று அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப் படிவம், பிற்சேர்க்கை 1, 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றின் அசல் ஆகியவற்றுடன் 

‘‘செயலாளர், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை
செல்ம்ஸ் போர்ட் ரோடு
புதுடில்லி-110055’’ 

என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)