முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 29, 2016

ராமேசுவரம் கோவில் மாதாந்திர உண்டியல் வசூல் ரூ. 83,42,967/-

No comments :
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், ரூ. 83 லட்சத்து 42 ஆயிரத்து 967 ரொக்கம், 135 கிராம் தங்கம், 6 கிலோ 905 கிராம் வெள்ளி, மற்றும் பக்தர்களின் காணிக்கைகள் கிடைத்தன.உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பரமக்குடி உதவி ஆணையர் ரோஜாளி சுமதா, தக்கார் பிரதிநிதி பண்டரிநாதன், முதுநிலை கணக்கு அலுவலர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரி, மேலாளர் லட்சுமி மாலா, சூப்பிரண்டுகள் ககாரின், ராஜாங்கம், பாலசுப்பிரமணியன் மற்றும் அண்ணாதுரை, கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினத்தந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 26, 2016

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் "செல் ஃபோன்”!!

No comments :
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசி  வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்க உள்ளதாக, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் சனிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் 1,116 பயனாளிகளுக்கு ரூ. 79 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதிபடி, 4 கிராம் தங்கம் வழங்குவது இனிவரும் காலங்களில் 8 கிராம் தங்கமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசி வழங்குவதற்கான் அரசு ஆணையும் முதல்வர் ஜெயலலிதாவால் பிறப்பிக்கப்பட உள்ளது. எனவே, அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசிகள் வழங்கப்படும்.


முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படுவது, 500 மதுக்கடைகளை மூடுவது, நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோப்புகளிலும் முதல்வர் கையெழுத்திட்டார் என்றார்.

இந்த விழாவுக்கு, மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா, எம்.எல்.ஏ.க்கள் நடிகர் கருணாஸ், எஸ். முத்தையா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு. சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மு. அலிஅக்பர் வரவேற்றார். இதில், சார்-ஆட்சியர் சு. சமீரன் (பரமக்குடி), கோட்டாட்சியர் ரா. ராம்பிரதீபன் (ராமநாதபுரம்), ராம்கோ துணைத் தலைவர் தஞ்சி. சுரேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி. வரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆ. செல்லத்துரை நன்றி கூறினார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, June 23, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு - கலைக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள மரக்கன்றுப் பண்ணைகளில் மொத்தம் 11.50 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அதை மாவட்டம் முழுவதும் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் எஸ். நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்,

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

பொதுவாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்களும், மலைப் பகுதிகளும் குறைவாக இருப்பதால், மழையின் அளவும் குறைவாகவே உள்ளது. இதற்கு மாற்றாக,   மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மரம் நடுதல் திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வனத்துறை மூலமாக ஊரக வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கமுதக்குடியில் 78,640, மாரியூரில் 50,600, தங்கச்சிமடத்தில் 55,000, ஆற்றங்கரை கிராமத்தில் 70,810 என மொத்தம் 2,54,420 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இவை தவிர, ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டக்கலைப் பண்ணைகளில் சுந்தரமுடையான் பண்ணையில் 2 லட்சமும்,கீழநாகாச்சி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 7 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் 6 இடங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த மரக்கன்றுகளை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள், அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் கண்மாய்க் கரைகளில் நடப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தினை பசுமை பரப்புமிக்க பகுதியாக மாற்றிட, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் ஊராட்சியை சேர்ந்த குந்துகால் கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மணிமண்டபம் அருகே 420 மீட்டர் நீளமுள்ள கற்சாலை அமைக்கப்பட்டு வருவதையும் ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியருடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி சென்றிருந்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர அரசு பள்ளி சாதனை, இது வரை 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன!!

No comments :
ஒரே அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. அவர்களில் 2 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள 25,379 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான புதன்கிழமை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில்: ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மனோஜ் குமார், பிளஸ் 2 தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 199.75 கட்-ஆஃப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவரின் தந்தை ரங்கசாமி ஹோட்டலில் பணியாளராக உள்ளார். தாய் அமராவதி 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் செல்கிறார்.அதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.செல்வபாண்டி பிளஸ் 2 தேர்வில் 1,157 மதிப்பெண் பெற்று, 197.50 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தார். இவரது தந்தை எஸ்.ரமேஷ் கூலிக்கு ஆடு மேய்ப்பதாகவும், தாயார் பாண்டியம்மாள் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் வழியில் பயின்றவர்கள்: இதுதவிர, அதே பள்ளியைச் சேர்ந்த எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், டி.இலக்கிய எழிலரசி ஆகியோருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நஸ்ரின் என்ற மாணவிக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பள்ளியின், பிளஸ் 2 உயிரியல் ஆசிரியர் சி. ஆறுமுகம் கூறியது:  தமிழக அரசின் எலைட் வகுப்புகள் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டும் இரு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. மருத்துவம், பொறியியல் படிப்பதற்காக மனதளவிலும் மாணவர்களை பயிற்றுவிக்கிறோம். தமிழில் படித்த எங்கள் பள்ளி மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியிலும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர் என்றார் அவர்.

மேலும் இதே பள்ளியில் படித்த கார்த்திக், கட்-ஆஃப் - 196.70 (மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு), எம். சுஜித், கட்-ஆஃப் - 195.50 (தாழ்த்தப்பட்ட பிரிவு), பி.கோகிலா, கட்-ஆஃப்  195.75 (தாழ்த்தப்பட்ட பிரிவு) எம். மகேஷ்குமார், கட்-ஆஃப் - 195 (தாழ்த்தப்பட்ட பிரிவு) ஆகியோருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, June 21, 2016

ராமேசுவரம்- பாலக்காடு பகல்நேர ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை!!

No comments :

ராமேசுவரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை பகல்நேரத்தில் இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீட்டர் கேஜ் பாதை இருந்த போது ராமேசுவரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் பொள்ளாச்சி வழியாக கோவை, பாலக்காடு சென்று வந்தது. அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு பல வழித்தடங்களில் போக்குவரத்து தொடங்கியபின்னும், இந்த ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.இந்த ரயிலை மீண்டும் இயக்கினால் ராமேசுவரத்தில் இருந்து  மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி,  பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும்.

எனவே இந்த ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, June 20, 2016

இராமநாதபுர சந்தையில் வியாபாரிகளுக்கு போதிய வசதி செய்து தர கோரிக்கை!!

No comments :
இராமநாதபுரத்தில் புதன் கிழமை தோறும் கூடும் சந்தையில் வியாபாரிகளுக்கு வெயிலிருந்து பாதுகாக்கதக்க இடம் வசதியை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டுமென வியாபாரம் செய்யும் வியாபார பெருங்குடிமக்கள் கோருகின்றனர்.


கடந்த ஆண்டு வாரச் சந்தை கூடுமிடத்தில் மூடிய நிலையில் இருந்த அறைகள் பாதுகாப்பின்மை எனும் காரணம் கூறி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இன்று வரையிலுமே பாதுகாப்பான மூடிய அறைகள் கட்டித்தாராமல் இருப்பது வேதனையளிப்பதாக சந்தை வியாபாரிகள் குமுறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் அவ்விடத்தில் மீண்டும் பாதுகாப்பான அறைகளை கட்டித்தந்து வியாபாரிகளை வெட்ட வெளியில் கடும் வெளியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென கோருகிறார்கள்.

அன்புடன்,

அ. சேக் அப்துல்லா
இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 19, 2016

கீழக்கரை - ஏர்வாடி சாலையில் கோர விபத்து, நான்கு இளந்தளிர்கள் இறப்பு!!

No comments :
கீழக்கரை to ஏர்வாடி ரோட்டில் நான்கு இளந்தளிர்களான இளைஞர்கள் வாகன விபத்தில் மரணம் நெஞ்சை பிழியும் துயரச் செய்தி....

பெயர் விபரம்
1. செய்யது இப்றாஹிம்
2.
அப்துல் ரஹ்மான் 
3.
ஃபாஹீத்
4.
ராசீக்

பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தாங்க முடியாத வேதனையில் உள்ள அந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை, 

யா அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை கொடுப்பாயாக ஆமீன்..
கீழக்கரையில் சிறுவர்களுக்கு பைக் வாங்கிக் கொடுப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுமாறு பெற்றோர்கள் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்

சிறுவர்கள் அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்குவதும் அதில் சிலர் மரனமடைவதும் சமீப காலமாக நமதூரில் அதிகரித்து விட்டது
பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு அதிவேக பைக்கை வாங்கிக் கொடுப்பது என்பது ஒரு தேவை அற்றச் செயல், 

அது அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கப் போவதில்லை, 
மாறாக நம் பிள்ளைகளுக்கு அது ஆபத்தே,

இன்று நடந்த விபத்தில் வாழவேண்டிய நான்கு அப்பாவி சிறுவர்கள் மரனித்தது என்பது மிக உச்சம்,

இது போன்ற விபத்து இதுவரை நிகழ்ந்தது இல்லை நம் ஊரில்
அந்த நான்கு சிறுவர்களும் அடிபட்டு கிடந்த அந்த கொடூரக்காட்சி நம் மனதை மிகவும் வேதனையில் ஆழ்த்திவிட்டது.

இது ஒரு தொடர்கதையாய் தொடராதிருக்கச் செய்வது பெற்றோர்களாகிய நம் கைகளில் தான் உள்ளது.
இந்த சிறுவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினர்களுக்காகவும் துஆ செய்வோம்.

-ஜமால் இப்ராஹீம்
கீழக்காரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் அரிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:

மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு ஆண்டும் சான்றுபெற்ற மிளகாய் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து முக்கிய பணப்பயிரான முண்டுமிளகாய் அதிகஅளவில் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.

பெரும்பாலான விவசாயிகள் பயிரிடும் முண்டு மிளகாய் விதைகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி விசயத்தில் சிறு,குறு விவசாயிகள் என்று மட்டும் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆடு,மாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரிகளை அமைக்க வேண்டும். மிளகாய் விவசாயம் அதிகம் மேற்கொள்ளும் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மிளகாய் குளிர்பதன கிடங்கு அமைக்காமல் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துள்ளது தேவையற்றது. மிளகாய் பயிர்களை குழித்தட்டு முறையில் வழங்கும்போது அதனை குறிப்பிட்ட பகுதிகளில் கொண்டு செல்லும் முன் செடிகள் வளைந்து சேதமடைந்து விடுகின்றன.எனவே, விதைகளாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் எமனாக விளங்கும் காட்டுக்கருவை மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். சோழந்தூர், ஆனந்தூர், கண்ணங்குடி பகுதிகளில் போதிய நீரின்றி சாவியாகி போன நெல்விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள்பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 827 மில்லிமீட்டர் ஆகும். கடந்த 2015–ம் ஆண்டு மாவட்டத்தில் 1,114 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 108 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக மே மாதத்தில் மட்டும் 91.38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பண்ணை குட்டைகள் அமைக்க விண்ணப்பித்தால் 15 நாளில் அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு புதிதாக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முன்பு பிர்க்கா அளவில் பயிர்சேதம் கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது வருவாய் அளவில் பயிர்சேதம் கணக்கிடப்படும்.

இதுவிவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மாவட்டத்தில் போதிய அளவு உரம் மற்றும் விதைகள் இருப்பு உள்ளது. சோலார் பம்பு செட்டு அமைக்க 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சோலார் உலர்களம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 25,106 சிறு,குறு விவசாயிகளின் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் வேளாண் துறை சார்பில் நெல்பயிர் மகசூல் போட்டியில் முதலிடம் பெற்ற ஆவரேந்தல் காந்தி என்பவருக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசையும், 2ம் இடம் பெற்ற களத்தாவூர் பகுதியை சேர்ந்த தமயந்தி என்பவருக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசையும் கலெக்டர் நடராஜன் வழங்கினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, June 16, 2016

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பெருங்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட 8 கிராமங்களின் கணக்குகளை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உ. மகேஷ்வரன் தணிக்கை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு வட்டாட்சியர் ராமர், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கலைமதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வருவாய் தீர்வாயக் கணக்குகள் ஆய்வின்போது, குயவன்குடி, தேர்போகி, வாலாந்தரவை, கும்பரம், காரான், இரட்டையூரணி, அழகன்குளம் உள்ளிட்ட பெருங்குளம் உள்வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.இதில், முதியோர் உதவித்தொகை கோரி இரு மனுக்களும், வீட்டு மனைப்பட்டா மாறுதல் கோரி இரு மனுக்களும் என மொத்தம் 7 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மாதம் 16 ஆம் தேதி ராமநாதபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்கள், 17 ஆம் தேதி மண்டபம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகளும், 21 ஆம் தேதி தேவிபட்டினம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட இருப்பதாகவும், அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் வட்டாட்சியர் மாரி தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக, மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. எஸ். வெள்ளத்துரை புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள 18 அரசு மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில்,
ராமநாதபுரத்தில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, ஓம்.சக்தி நகர், கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள அரசு மதுக் கடைகள் மற்றும் ராமேசுவரத்தில் கோயில்,
பாம்பன் பேருந்து நிலையம்,
முதுகுளத்தூர் முருகன கோயில்,
பாண்டியூர்,
பரமக்குடி அருகே எமனேசுவரம் பிரதான சாலை,
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை,
திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை பேருந்து நிலையம்

ஆகியவற்றுக்கு அருகில் உள்ள மொத்தம் 18 அரசு மதுபானக் கடைகளை அகற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, June 14, 2016

பரமக்குடி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பேருந்து உள்ளே வந்து செல்ல கோரிக்கை!!

No comments :
எப்போது மாறும் இந்த நிலைமை?

பரமக்குடி பேருந்து நிலையத்தில் இரவு மணியிலிருந்து இராமநாதபுரம், இராமேஸ்வரம் பேருந்துகள் நிலையத்திற்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை பரமக்குடி போக்குவரத்து நிர்வாகம் பயணியர்களுக்கு உருவாக்கி இருப்பது அவதியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.இரண்டு குழந்தைகளுடன் நிற்கும் கணவன்மனைவி நிலைமையும், கர்ப்பிணிகளது, மற்றும் வயதானவர்களது நிலைமையும் மிகுந்த அலக்கழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையானது நெடுஞ்சாலையில் தேவையற்ற வாகன நெரிசலையும் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு அவதியை தருகின்றது. இந்நிலையை தடுத்து இரவோ-பகலோ எந் நேரமாயினும் பேருந்துகள் நிலையத்துக்குள்ளேயே பயணியர்களை ஏற்றிவரவும்-இறக்கிவிடவும் உத்தரவிட மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவலர்களும் ஆவணம் செய்ய இதன் வழியே வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு
சேக் அப்துல்லா

பரமக்குடி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, June 13, 2016

ராமநாதபுத்தில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி காலை 11.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், புகார்களைத் தெரிவிக்கலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 12, 2016

குற்றாலத்தில் சீசன் துவங்கியது!!

No comments :

  
குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்

தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.

இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை, புளியரை, குண்டாறு, மேக்கரை, குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இன்று காலை அருவிகளில் வெள்ளம் வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அனுமதியளிக்கப்பட்டனர்

இன்று விடுமுறை தினம் என்பதால் எராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)