(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 21, 2017

மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் கீழக்கரை கடற்கரைப் பூங்கா, அச்சப்படும் மக்கள்!!

No comments :
கீழக்கரை கடற்கரை பூங்கா, மீன் பிடி துறைமுகம் பகுதியில் இரவு நேரங்களில் இருளில் இருப்பதால், கடற்கரைப்பகுதியில் நடமாட முடியாமல் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இப்பகுதியில் மீன் பிடி துறைமுகமும், அதனையொட்டிய பகுதிகளில் கடற்கரைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாலை நேரங்களில் நடை பயிற்சி, உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடற்கரைப்பகுதியில் மக்கள் அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். இப்பகுதியில் மின் விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. மின் விளக்குகள் எரியாததால், கடற்கரைப் பூங்காவிற்கு வருகைதரும் பெண்கள் அச்சத்தில் இருள் வருவதற்குள் கடற்கரைப்பகுதியை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. அதே போல் கடலில் மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இருளில் கடற்கரைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் இளைஞர்கள் ஒரு சிலர் ஈடுபடுவதால், அமைதியாக கடற்காற்று

வாங்க வருகை தருபவர்கள் எரிச்சலடைகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து கடற்கரைப் பூங்காவை பொதுமக்கள் இரவு நேரங்களில் பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment