Monday, May 17, 2021
மாவட்டம் தோறும் கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் அமைக்க ஆயுஷ் வெல்ஃபேர் கோரிக்கை!!
மாவட்டம் தோறும் கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் அமைக்க ஆயுஷ் வெல்ஃபேர் கோரிக்கை:
அனுப்புநர் : மாநில துனைத் தலைவர் ,
AFAAQ ,Tamilnadu ( Ayush welfare),
3/ 166A, தென்றல் நகர் ,
வாணி( அஞ்சல்).
இராமநாதபுரம் .623536
பெறுநர்: 1.உயர்திரு. முதன்மைச் செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை,
சென்னை-9
2.அனைத்து மாவட்ட ஆட்சிதலைவர்கள்
3.அனைத்து சுகாதார நலவாழ்வு சங்கங்கள்
பொருள் :
10 நாட்களில்- 100 கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் நிறுவ அரசு முடிவு ,
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அறிக்கை - தொடர்பாக....
மதிப்பிற்குரிய ஐயா,
மேற்க்கண்ட பொருள் குறித்த தங்களது அறிக்கை வாயிலாக கீழ்க்காணும் கோரிக்கையை பதிவு செய்கிறோம்
கொரோனா சித்த சிகிச்சை மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்க பொது சுகாதார துறை மற்றும் இந்திய மருத்துவ சித்த மற்றும் ஆயுஷ் மருத்துவ துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மனிதவள மேலாண்மையை உறுதி செய்யவும் தேவைக்கு ஏற்ப மாவட்ட அளவில் அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்களை கூடுதலாக பணியமர்த்திட வேண்டுகிறோம். .
No comments :
Post a Comment