(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 9, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் ஆக மொத்தம் 14,306 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது.

 

இதில் 6,413 மாணவர்கள், 7,364 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மாணவர்கள் 94.45 சதவீதம் பேரும், மாணவிகள் 97.98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 96.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில்,

43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மொத்தமாக 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.20 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றது. நிகழாண்டு 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு சென்றது.

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து கூறியதாவது:

17 பள்ளிகளில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுதியதால் கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முகவை முரசு சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment