முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 22, 2015

துபாய் EC Harris நிறுவனத்தில் Finance Assistant வேலை வாய்ப்பு!!

No comments :
Finance Assistant 
EC Harris - Dubai



Ensure the timely processing and registration of supplier invoices for both trade and non-trade accounts including intercompany charges.

Key Responsibilities / Duties

  • Review of supplier invoices and its supporting documents.
  • Generation of covering GRN for validated invoices.
  • Registration of invoices in Agresso and monitoring of its subsequent approval.
  • Custodianship of administrative petty cash fund.
Person Specification / Qualifications
  • Accounting graduate or any equivalent course
  • 2 to 3 years Middle East experience in a Finance role
  • High proficiency in MS applications particularly excel
  • Excellent communication skills
  • Strong team player
  • Ability to work on own initiative
TO APPLY: CLICK HERE

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - திரை விமர்சனம்!!

No comments :

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது


பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இளைஞர்கள் பல விதங்களிலும் படும் பாட்டைச் சொல்கிறது படம்.

அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் சினிமாத் தனத்தைக் கூடுமான வரையில் தவிர்த்துள்ளார் இந்த முதல் படைப்பில். சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் முக்கியமானது வீடு பிடிப்பது. வெற்றிபெற்ற பிறகு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுபவர்கள், அடையாளம் தெரிவதற்கு முன் அலைக்கழிப்பதை சோகமாகவும் ஜாலியாகவும் சித்தரிக்கிறது படம்.

வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இதில் இல்லை என்பது முதல் ஆறுதல். நகர வாழ்க்கையின் அவதிகளை எதிர்கால வெற்றி எனும் கனவுக்காக சகித்துக்கொள்ளும் பரிதாப மனிதர்கள்... இவர்களிடம் பலவீனமான பல குணங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகி நிற்கிறது.


வெவ்வேறு விதமான மனிதர்கள் பெரும் கனவுகளுடன் சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் செல்லப் பாண்டியனுக்கு (பாபி சிம்ஹா) ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகானந்தரின் பொன்மொழியைச் சொல்லித்தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன்போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். தான் காதலித்த பெண்ணிடம் காதலைச் சொல்ல இயலவில்லை. காதல் அவனுக்குள் லேசான நறுமணம் வீசிவிட்டுக் காற்றோடு கலந்துவிடுகிறது.

செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (மருதுபாண்டியன்) கதையோ வேறு. ஓயாமல் குடிக்கும் சரவணனுக்கும் ஓயாமல் உழைக் கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் உறவும் அரிதாரம் பூசப்படாமல் ஈரத் தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்தி தன் காதலிக்குத் துரோகம் இழைக்கிறான். ஆனால் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவனை உள்ளத்தில் இருத்தி அவன் தந்த குழந்தையுடன் பெருநகரில் சிரமமான வாழ்வை நடத்துகிறாள்.

அவளால் கிராமத்துக்குத் திரும்பிப் போக இயலாது. கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெருநகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிறபோக்கில் சொல்கிறது.

நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தனது அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. பிரமாண்ட சினிமா கனவைச் சுமப்பவர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுவது உருக்கம்.

பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநரிடம் செல்லப்பாண்டியன், ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, ‘மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏதுஎன்கிறார். அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை.. விநோதமான உண்மையும் தெறிக்கிறது.

சரண்யா, பாபி சிம்ஹா, பிரபஞ்செயன், லிங்கா உள்ளிட்ட பலரின் நடிப்பும் இயல்பு. குறிப்பாக பாபி சிம்ஹா அடங்கிய தொனியில் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரத்னசாமியின் ஒளிப்பதிவும் பலம். பொருத்தமான இசைக் கோலங்களுடனும் சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணிய வகையிலும் கேம்லின் - ராஜாவின் இசை படத்துக்கு உதவியுள்ளது. அப்துல் ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதை ஆகியவற்றை கோத்திருக்கும் விதம் ரசனை.

உதிரி உதிரியாக மனிதர்களின் வாழ்வைச் சொல்ல இந்த யதார்த்த வடிவமும், பளிச்சென்ற பாத்திரப் படைப்புகளும் பொருத்தமானதுதான். 




பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி!!

No comments :

பெரியபட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந் தியா அமைப்பு சார்பில்     மே மாதம் 30,31 தேதி களில், மக்களின் பண்பாடு, கலாச்சாரம், கலைகளை நினைவுபடுத்தும் விதமாக மக்கள் சங்கமம்மாநாடு நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக நேற்று மினி மாரத்தான் போட்டி நடத்தப் பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக் தலைமை வகித்தார்.        
ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி நிர்வாகத் தலைவர் பசீர் அலி,
மாநாட்டுக்குழுத்தலைவர் ரியாஸ்கான், எஸ்.டி.பி. மாவட்டத் தலைவர்
பசீர் அலி, வர்த்தக அணிச்செயலாளர் சேக் மீரான், மாநாட்டுக்
குழுத்தலை வர் நியாஸ் கான் ஆகி யோர் முன் னிலை வகித்தனர்.
(File Photo)


மாவட்ட தட கள பயிற்சியாளர்  சுரேஷ் குமார்,  மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து  தொடங்கி வைத் தார்.  பெரியபட்டி னம்,  முத் துப் பேட்டை,
சேது நகர், முத்தரையர்  நகர்,  ஜலாலியா  நகர்  வழியாக  6 கி.மீ  தொலைவு தூரம் போட்டி நடத்தப் பட்டது.
போட்டி யில் 284 வீரர் கள் கலந்து கொண் னர். பெரியபட்டி னம் எம் எம்ஜி விளையாட்டுக் கு ழுவை சேர்ந்த உபைத் முதலி மும்,  புதுக்குடியி ருப்பைச் சேர்ந்த முத்துக் கண் ணன் இரண் டா மி மும்,  பெரியபட்டினம் தமாமுதீன்  மூன் றாம் இட மும் பெற்றனர்.

போட்டி ஏற்பா டுகளை விளை யாட்டுக் குழுத்த லைவர்  சேகு ஜலா லு தீன், செய்தி தொடர் பாளர் பாபுல் ஜன்னா ஆகி யோர் செய்திருந் தனர்.