Wednesday, March 11, 2015
திருப்புல்லாணி திருக்கோயில் பங்குனித் திருவிழா
திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகன்னாதப்
பெருமாள் திருக்கோயில் பங்குனித் திருவிழா,
மார்ச் 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குவதாக,செவ்வாய்க்கிழமை கோயில் கண்காணிப்பாளர் கண்ணன்
தெரிவித்தார்.
இது குறித்து,
அவர் மேலும் கூறியது: வைணவத்
திருத்தலங்கள் 108 இல் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள்
திருக்கோயில் 44 ஆவது திருத்தலமாக திகழ்கிறது. ராமாயண காலத்திலிருந்தே
பல்வேறு வரலாற்றுச் சிறப்புக்களையுடைய இத்திருக்கோயிலில்,
ஆண்டுதோறும் பங்குனித்
திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான
திருவிழா, இம்மாதம் 25ஆம் தேதி இரவு காப்புக்கட்டும் உற்சவத்துடனும்,
மறுநாள் காலையில் கொடியேற்றும்
வைபவத்துடனும் தொடங்குகிறது.
ஏப்ரல் 3 இல் தேரோட்டமும், 4 இல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி. மகேந்திரன்,
சரக அலுவலர் சி. சுவாமிநாதன்
ஆகியோரின் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
No comments :
Post a Comment