Sunday, April 10, 2016
உதயமானது மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி!!
தேமுதிக-விலிருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திர குமார் தலைமையில் இன்று போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சந்திர குமார் போட்டிப் பொதுக்குழு கூட்டம் நடத்தினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் சந்திரகுமார் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தேமுதிக-வை உடைக்கும் எண்ணமில்லை என்றார்.
“தேமுதிக-வை உடைக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது, தமிழகத்தில் அதிமுக அரசை அகற்றுவதற்காக மக்கள் தேமுதிக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தை குறைசொல்ல மாட்டோம். வைகோ-வைப் போன்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது வருத்தமளிக்கிறது” என்றார்.
மக்கள் நலக்கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி அமைத்ததற்காக தேமுதிக-வையும், பிரேமலதாவையும் கடுமையாக விமர்சித்ததையடுத்து சந்திரகுமார் எம்.எல்.ஏ உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தேமுதிக அடிப்படை உறுப்பினர் அடையாளத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டார் விஜயகாந்த்.
இதனையடுத்து தேமுதிக முழுக்கவும் பிரேமலதா கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்று விமர்சித்தார் சந்திரகுமார்.
இந்நிலையில் இன்று மக்கள் தேமுதிக என்ற கட்சி உதயமாகியுள்ளது.
செய்தி: தி ஹிந்து
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment