(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 10, 2022

வருகிற 13-ந் தேதி பொதுவினியோகத் திட்ட குறைதீர் முகாம்!!

No comments :

தமிழக அரசின் உத்தரவின் படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சிமுறையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.

 

ராமநாதபுரம் தாலுகா-தேர்போகி ரேஷன் கடை,

ராமேசுவரம் தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம்,

திருவாடானை தாலுகா-கீழ்பனையூர் ரேஷன்கடை,

பரமக்குடி தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை,

முதுகுளத்தூர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம், 

கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம், 

கமுதி தாலுகா- து.வாலசுப்பிர மணியபுரம் ரேஷன்கடை,

கீழக்கரை தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம்,

ஆர்.எஸ். மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம்

ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

 

இந்த கிராமங்களை சேர்த்த பொதுமக்களுக்கு

மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல்,

குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம்,

புகைப்படம் பதிவேற்றம்,

பெயர் சேர்த்தல், நீக்கல்,

முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் 

மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

 


மேலும் ரேஷன் கடை களில் பொருள்பெறவருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல் பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment