(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 5, 2015

மே 15 முதல் ராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி!!

No comments :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களில் பல்வேறு நபர்கள் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தட்டச்சர்களாக பணிநியமனம் பெற்றுள்ளனர்.

இப்பயிற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வார நாள்களில் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.


இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மார்பளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04567-221160 அல்லது 86086-82791 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments :

Post a Comment