(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 5, 2015

துபாயில் அரேபியன் டிராவல் கண்காட்சி துவங்கியது!!

No comments :
துபாயில் நேற்று அரேபியன் டிராவல் கண்காட்சி நேற்று தொடங்கியது.

கண்காட்சி தொடங்கியது
அரேபியன் டிராவல் கண்காட்சி உலக வர்த்தக மைய கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 7–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட 86 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சி குடும்ப சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலான மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க குடும்பத்தினர் 62 சதவீதம் பேர் தங்களது குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கவே விரும்புகின்றனர். இதற்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதையே அதிகம் விரும்புவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


சுற்றுலா பயணிகளுக்கான தகவல்கள்
இந்த அரேபியன் டிராவல் கண்காட்சி 22–வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை அலுவலகங்கள், விமான நிறுவனங்கள், டிராவல் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
இதேபோல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் முக்கிய சுற்றுலா தளங்களின் விவரங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment