(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 19, 2017

பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம்!!

No comments :
பாம்பன் பாலத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,என போலீசார் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரோடு பாலம் முக்கியமானது. ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் தங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை சாலை பாலத்தில் வரிசையாகநிறுத்தி, ரயில் துாக்குபாலத்தையும், கடல் அழகையும் ரசிக்கின்றனர். இதனால், பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றன.


இதையடுத்து, இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, பாலத்தில் இனி வாகனங்களை நிறுத்தினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அனைத்து வாகனங்களும் 30 கி.மீ., வேகத்தில் தான் செல்ல வேண்டும், என அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, சுற்றுலாப்பயணிகள், வாகன ஓட்டிகள் அறியும் வகையில், பாலத்தின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் ரோந்து பணியும் நடக்கிறது. பாம்பன் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து இப்பணியை செய்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment