(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 28, 2015

ராமநாதபுரம் மாவட்டத் தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் - அமைச்சர் சுந்தர்ராஜன் திறந்து வைத்தார்.

No comments :
ராமநாதபுரம் மாவட்டத் தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல்களை அமைச்சர் சுந்தர்ராஜன் திறந்து வைத்தார்.

நீர் மோர் பந்தல்

அ.தி.மு.க. பொது செயலா ளர் ஜெயலலிதா கோடை வெயிலின் தாக்கத்தை குறைக் கும் வகையில் நீர்மோர் பந்தல் களை தொடங்கி பொதுமக்க ளுக்கு குளிர்பானங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முனி யாண்டி ஏற்பாட்டில் திருப்புல் லாணி பஸ் நிறுத்தம் அருகே கோடைகால நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சுந்தர்ரா ஜன் திறந்து வைத்தார். 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தர்மர், அவை தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, திருப்புல் லாணி யூனி யன் தலைவர் ராஜேசுவரி ஆகியோர் முன்னிலை வகித் தனர். அதன் பின்னர் அமைச் சர் மற்றும் அ.தி.மு.க. நிர்வா கிகள் பொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினர். 

பரமக்குடி

பரமக்குடி கூட்டுறவு பால் பண்ணை அருகில் நகர் அ.தி. மு.க. சார்பில் நகர் செயலா ளர் கணேசன் ஏற்பாட்டிலும், ஆர்ச் அருகில் மாவட்ட சிறு பான்மை பிரிவு பொருளா ளர் அப்துல் மாலிக் ஏற்பாட் டிலும் நீர்மோர் பந்தல் திறக் கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச் சிக்கு அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நயினார்கோவில்

இதேபோல பார்த்திபனூ ரில் ஒன்றிய செயலாளர் முத் தையா ஏற்பாட்டில் அமைக் கப்பட்டுள்ள நீர் மோர் பந் தலை அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, ஊராட்சி தலைவர் ரேணுகா தேவி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல நயினார் கோவிலில் ஒன்றிய செயலா ளர் குப்புச்சாமி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.

செய்தி: தந்தி


No comments :

Post a Comment