Friday, March 27, 2015
கீழக்கரையில் HDFC வங்கியின் புதிய கிளை!!
கீழக்கரை தபால் அலுவலகம் ரோடு (POST OFFICE ROAD) கிழக்கு தெரு செல்லும் பாதையில்,இன்று H.D.F.C வங்கி திறக்கப்பட்டுள்ளது.இந்த வங்கியை கட்டிடத்தின் உரிமையாளர்,ஜனாப்.அலாவுதீன் (டங் டங்) அவர்களால் திறந்து வைக்கபட்டது,சிறப்பு விருந்தினராக மதுரை H.D.F.C வங்கியின் துணை தலைவர் திரு.C.V.ஹரிகலந்து கொண்டார்.
இது குறித்து அந்த வங்கியின் மேலாளர் திரு நடராஜ் குமார் அவர்கள் கூறும் போது எங்களது வங்கி இந்தியாவில் 6000 க்கு மேலாக உள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கீழக்கரையில் திறக்கப்பட்டுள்ளது .
இதில் விவாசாயகடன்,நகைகடன், இருசக்கர வாகன கடன் ,புதிய வீட்டுகடன்,இதுமட்டுமல்லாது நகரத்தில் என்னென்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல கீழக்கரை கிளைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் விபரங்களுக்கு கிளை மேலாளர் நடராஜ் குமார்.தொலைபேசி என்:98941 423 57.
செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்
No comments :
Post a Comment