(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 5, 2015

நண்பேன்டா - தமிழ் திரை விமர்சனம்

No comments :
ஒரு கல் ஒரு கண்ணாடிபடத்தின் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக் குநராக இருந்த ஜெகதீஷ், தன்னுடைய குரு இயக்கிய படங்களை ஆங்காங்கே வெட்டி, தட்டி, புதிய பூச்சுடன் கொடுத் திருக்கும் முதல் படம்தான் நண்பேன்டா’.

தஞ்சாவூரில் வெட்டியாக ஊர் சுற்றும் சத்யா (உதயநிதி). திருச்சியில் இரண்டரை ஸ்டார்ஹோட்டலில் வேலை பார்க்கும் தனது நண்பன் சிவக்கொழுந்துவைப் (சந்தானம்) பார்க்க வருகிறார். வந்த இடத்தில் ரம்யாவை (நயன்தாரா) பார்த்தவுடனேயே பற்றிக்கொள் கிறது காதல். நயன்தாராவை மடக்கு வதற்காகத் திருச்சியிலேயே டேரா போடு கிறார் உதயநிதி.


உதயநிதி, சந்தானத்துடன் சண்டை போட்டுப் பிரிந்த கருணாகரன், போலீஸ் அதிகாரியாகத் திருச்சிக்கு வந்து இருவரை யும் பழிவாங்கத் துடிக்கிறார்.

நயன்தாரா உதயநிதியிடம் தன் காதலைச் சொல்வதற்கு முன்பு, கடந்த காலப் பிரச்சினை ஒன்றைச் சொல்லி மனம் வருந்துகிறார். உதயநிதி அதைக் காமெடி ஆக்கிவிட, நயன்தாரா கோபத்துடன் விலகிச் செல்கிறார்.
தாதாவான ராஜேந்திரனுக்கும், வங்கியில் பணியாற்றும் நயன்தாராவுக்கும் வங்கிக் கடன் விஷயத்தில் விரோதம் ஏற்படுகிறது. அவர் நயன்தாராவைக் கொல்லத் திட்டம் போடுகிறார். ஆனால் அவரே கொலை யாகிறார்.
உதயநிதி, சந்தானத்தின் மேல் கொலைப் பழி விழுகிறது.
நண்பர்கள் தப்பித்தார்களா? பிரிந்தவர்கள் கூடினார்களா? இதுதான் மீதிக் கதை.

படம் முழுவதையும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோரே ஆக்கிரமித்திருக் கிறார்கள். நயன்தாராவைக் கவருவதற்காக உதயநிதி மெனக்கெடுகிறார். அவை நயன் தாராவை மட்டுமல்ல; ரசிகர்களையும் கவரத் தவறுகின்றன.
நயன்தாரா திருச்சிக்கு வந்ததற்குப் பெரிய பின்னணி இருப்பது போலக் காட்டுவது, சரக்கு வாங்கித் தரும்படி உதயநிதியிடம் நயன்தாரா கேட்பது, வில்லனை ஸ்கார்பியோ அடைமொழியுடன் கூப்பிடுவது எனக் காட்சி களில் தீவிரம்கூட்டுகிறார் இயக்குநர். கடைசி யில் அவற்றைக் காமெடியாக்கிச் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். விளைவு? ஜஸ்ட் பாஸ்.
படத்தில் பல திருப்பங்கள். எல்லாமே ஒன்றாகத் தோற்றம் காட்டி வேறொன்றாக மாறும் கண்ணாமூச்சிதான். இதைப் படம் முழுவதும் காட்டியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்தக் கண்ணாமூச்சி அலுப்பூட்டுகிறது.
உதயநிதியின் நடிப்பைவிட நடனத்தில் முன்னேற்றம் அதிகம். சந்தானத்தின் முத்திரை பஞ்ச் இதில் இல்லை. சில இடங்களில் மட் டுமே சிரிக்க வைக்கிறார். ஹோட்டலுக்கு வரும் பெண்கள் எப்படிப்பட்ட வர்கள் எனக் கண்டு பிடிக்கச் செய்யும் பரிசோதனை தொடங்கி அவரது பல முயற்சிகள் பிசுபிசுக்கின்றன.

நயன்தாராவின் நடிப் பிலும் தோற்றத்திலும் மெருகு ஏறியிருக்கிறது. அவர் பெயரை வைத்தே ஒரு பாடல் உருவாக்கப் பட்டிருப்பது அவரது நட்சத்திர அந்தஸ்தைக் காட்டுகிறது.

பேருக்கு வில்லன் களாக நான் கடவுள்ராஜேந்திரனும், நரசிம்மனும் வந்து செல்கிறார் கள். படத்தில் அவர் களுக்கு எந்த வேலையும் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து நடிகை ஷெரீன் திரையில் முகம் காட்டி யிருக்கிறார். சற்றே வில் லத்தனமான காமெடியில் கவனிக்கவைக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன. ஆனால் மெட்டுக்கள் பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன. 

பின்னணி இசை பரவாயில்லை. பாலசுப்பிரமணியெம் ஒளிப் பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்குக் குளுமையான விருந்து.

படம் முழுவதும் சீரியஸ் முகம் காட்டி, காமெடித் திருப்பம் தர முயலும் இயக்குநர் ஜெகதீஷ், சில இடங்களில் வெற்றிபெறுகிறார். பல இடங்களில் அலுப்பூட்டுகிறார். காமெடிக்கான பின்னணியை வலுவாக்க இன்னும் மெனக்கெட்டிருந்தால் நண்பேன்டாஎன்று ரசிகர்களும் ஒட்டி இருப்பார்கள்.

விமர்சனம்: தி ஹிந்து

No comments :

Post a Comment