(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 25, 2015

வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப கோரிக்கை!!

No comments :
வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் நுழைவுப் பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சிநிதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் வடக்கு, மேற்கு பகுதிகள் சுற்றுச்சுவர்கள் இன்றி திறந்த வெளியாக உள்ளது. இதனால், ஆடு, மாடுகள் பள்ளிக்குள் தஞ்சமடைகின்றன.
இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த அஸ்கரி அலி கூறுகையில்,""பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தளவாடச்சாமான்கள், கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. சுற்றுச்சுவர் எழுப்ப மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்,'' என்றார்.

செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு

No comments :

Post a Comment