(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2015

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்!!

No comments :
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பால பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக அரசு தொடக்க விழாவை தாமதப்படுத்தியது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானதால் எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாத தொடக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இது தள்ளிபோனது. இந்நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். 

பிற்பகல் 12 மணியளவில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, தொடர்ந்து கோயம்பேடு, சிஎம்பிடி, அருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சிஎம்ஆர்எல் பணிமனை ஆகியவற்றையும் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் நகரும் படிகட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். நாள்தோறும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

கட்டணம் விபரம்:

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10ம் அதிகபட்சமாக ரூ.40ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் முதல் ஈக்காட்டுந்தாங்கல் வரை ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் அசோக் நகர் வரை ரூ.20ம் ஆலந்தூர் முதல் வடபழனி வரை ரூ.30ம் ஆலந்தூர் முதல் அரும்பாக்கம், ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலும் ரூ. 40 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு கட்டணமாக இருமடங்கு வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாதராண மின்சார ரயில்களைப் போலவும், பறக்கும் ரயில்களைப் போலவும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியாது. ரயில் நிலையத்தில் டிக்கெட்டை காண்பித்தால் தான் கதவுகள் திறக்கும்.

டிக்கெட் ரீசார்ஜ் வசதி:


நிரந்தர டிக்கெட் வாங்கியவர்கள் அவ்வப்போது ரயில் பயணம் செய்யும்போது, மீதமுள்ள தொகை நிலவரத்தை ரயில் நிலையங்களில் உள்ள இயந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம். தொகை காலியானதும் அங்குள்ள ரீசார்ஜ் இயந்திரத்தில் பணம் அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையான அளவு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குரூப் சுற்றுலா டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



No comments :

Post a Comment