(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 26, 2015

சவுதிஅரேபியாவில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம், மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிவிப்பு!!

No comments :
சவுதிஅரேபியா அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமுள்ள அலோபதி டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அலோபதி டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு புதுடில்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் வருகிற 27–ந்தேதி முதல் ஆகஸ்டு 5–ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட சிறப்பு கண்சல்டண்ட் டாக்டர்கள், மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட ரெசிடெண்ட் டாக்டர்கள், 40 வயதிற்கு உட்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.



தேர்ந்தெடுக்கப்படும் ரெசிடெண்ட் டாக்டர்கள் வளரும் நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.75,000 முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், சிறப்பு டாக்டர்கள் முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 20 ஆயிரமும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று அனுபவத்திற்கேற்ப ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், கண்சல்டண்ட் டாக்டர்களுக்கு முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 24 ஆயிரம் வரையிலும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 26 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.


மேலும் இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவுதிஅரேபியா அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை 044–22502267, 22505886, 08220634389 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இணையதள முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.


No comments :

Post a Comment