(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 12, 2015

கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்!!

No comments :


கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 

கீழக்கரை

கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன்ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகத்தின் கீழ் முள்ளவாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார். செய்யது சலாகுதீன் முன்னிலை வகித்தார். விழாவில் கீழக்கரை நகரசபை தலைவர் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் முஸ்லீம்சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவாடானை

திருவாடானை யூனியனில் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து தலைமை தாங்கினார். யூனியன் துணை தலைவர் ராமகிருஷ்ணன், தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநயினா, ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிறிஸ்டல் ஜாய்லெட், பியட்ரஸ் அன்னஜாய், தனிஸ்லாஸ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, பெற்றோர் சங்க தலைவர்கள் மகாலிங்கம், ராஜா, தொண்டி நகர் அ.தி.மு.க. துணை செயலாளர் கண்ணன், ஓரியூர் பள்ளி தாளாளர் யாகு, ஆசிரியர்கள் வன்மீகநாதன், ஆல்ட்ரின் சவரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை அமலா தங்கத்தாய் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவர் சிராஸ்நிஷா அஜ்மல்கான், ஒன்றிய கவுன்சிலர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் யூனியன் தலைவர் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும், அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் 4வது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்த மாணவி சங்கீதாவுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் உஷாராணி உள்பட மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்பிரிட்டோ நன்றி கூறினார். 


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment