(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 18, 2015

பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு!!

No comments :


பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் துணை என்ஜினீயர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.


மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இன்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 22 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்இ, எம்.டெக், பி.இ., பி.டெக் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவமும் இருத்தல் நலம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஊதியம் ரூ.16,400-ரூ.40,500 என்ற அடிப்படையில் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bel-india.com/-ல் தொடர்புகொள்ளலாம்.

No comments :

Post a Comment