(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 28, 2015

புதன்கிழமை (செப்.30) ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்!!

No comments :
ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் வரும் புதன்கிழமை (செப்.30) பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் புதன்கிழமை காலை 8 மணிக்கு பரமக்குடி நகர் எமனேசுவரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சன்னதி வாசலில் நெசவாளர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் பரமக்குடியில் முக்கிய கடை வீதிகளில் மக்களிடம் குறைகளை கேட்கிறார்.


இதனையடுத்து மிளகாய் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பாக வாகனத்தில் இருந்தபடியே பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கலாம் வீட்டில் அவரது உறவினர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்களை சந்தித்து பேசுகிறார்.


பகலில் ராமேசுவரம் தீவு பாம்பன் தெற்குவாடி பகுதியில் மீனவர்களை சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பரக்கத் மகாலில் மாணவர்களோடும் அதன் பின்னர் முக்கியப் பிரமுகர்களோடும் கலந்துரையாடுகிறார்.

மாலையில் அரண்மனை கடை வீதியில் பொதுமக்களயும், வியாபாரிகளையும் சந்திக்கிறார். மாலை 6 மணியளவில் திருவாடானையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இரவு 8 மணிக்கு தொண்டியில் கடைத்தெருவில் மக்களை சந்தித்து பேசிவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக் செல்வதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment