(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 7, 2015

ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!!

No comments :
ராமநாதபுரத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்மிகு கண்ணன் கோயில்களிலும், ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் ஹரே கிருஷ்ண சத்சங்க மையத்தின் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் ஊஞ்சல் ஆடும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பகவத்கீதையின் சுலோகங்களை சொன்ன பள்ளி மாணவ,மாணவியர்க்கும், கிருஷ்ணர்,ராதை வேடம் அணிந்து வந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலபிரபுபாதா அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தானில் கிருஷ்ண ஜயந்தி விழா திருவிளக்கு பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை பால்குடம் எடுத்து வரப்பட்டு அருள்மிகு கண்ணபிரானுக்கு பாலாபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. பெண்களுக்கென பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.



விழாவுக்கு மதுரை பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரி நிறுவனர் மலேசியா.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் கே.கவிதா கதிரேசன் வரவேற்று பேசினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட யாதவர் சங்கத் தலைவர் வி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைபவமும், வழுக்கு மரம் ஏறுதல், கண்ணபிரான் அழைப்பு மற்றும் உறியடி உற்சவம் ஆகியனவும் நடந்தன. பின்னர் அருள்மிகு கண்ணபிரான் தேரில் பவனி வந்தார்.

ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கே.பாண்டி, செயலர் ஏ.எஸ்.சந்திரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் வடக்குரத வீதி அருள்மிகு ஸ்ரீருக்மணி சமேத பாண்டுரெங்க கிருஷ்ண சுவாமி சன்னதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை 108 சங்காபிஷேகத்துடன் தொடங்கியது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மதியம் அன்னதானமும்,மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. குளத்தூர் கோ.ஸ்ரீனிவாசராகவன் ஸ்ரீஜெயந்தி விழா நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் ஆடிட்டர்.எம்.ஏ.சுந்தர்ராஜன், எஸ்.முத்து சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment