(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 20, 2015

சித்தார்கோட்டை கிராம முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்குப் பதிவு!!

No comments :
ராமநாதபுரம் அருகே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனது காதலியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக, சித்தார்கோட்டை கிராம முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் 50 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன் மாரிசங்கர் (23). இவர், புதன்கிழமை மாலை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனது காதலியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சித்தார்கோட்டை கிராமம் வழியாகச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த கமருதீன், ரஸ்தாலி, சுல்தான், முகம்மது ரபி மற்றும் ஜமாஅத் தலைவர் தீனுல்லாகான் உள்ளிட்ட 50 பேர் சேர்ந்து, மாரிசங்கரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து, மாரிசங்கர் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சித்தார்கோட்டை ஜமாஅத் தலைவரின் தூண்டுதலின்பேரில், 50 பேர் தன்னைத் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.1800 ஆகியவற்றையும் பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


புகாரின்பேரில், காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் முருகபூபதி, பெயர் தெரிந்த 10 பேர் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தாக்குதலில் காயமடைந்த மாரிசங்கர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment