(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 28, 2016

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி!!

No comments :
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 365 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 17 பரிசுகளை வென்று முதலிடத்தை பிடித்தனர். 


கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 7 பரிசுகளை வென்று 2 வது இடத்தையும், முகைதீனியா மெட்ரிக் பள்ளி மற்றும் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தலா 5 பரிசுகளை பெற்று 3 வது இடத்தையும் பிடித்தனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர் டாக்டர் சம்சுதீன் ஆலிம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் கலந்து கொண்டார். முன்னதாக இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகீம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியை நவ்சாத் பேகம், நிர்வாக அலுவலர் மலைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment