வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Sunday, February 7, 2016

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது வழக்கு!!

No comments :
போலியான ஆவணங்கள் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் கொத்தனார் தெருவில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் சண்முகநாதன்(44). இவர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது சகோதரி ராஜேஸ்வரியின் கணவர் ரகுநாதசேதுபதி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் தெருவில் வசித்து வரும் சின்னச்சாமியை தனது கணவர் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்தும், போலியான ஆவணம் தயாரித்து அதை மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் காண்பித்து ராஜேஸ்வரி மோசடியாக பாஸ்போர்ட் பெற்றுள்ளார். 

இதையடுத்து ராஜேஸ்வரி மற்றும் சின்னச்சாமி ஆகிய இருவர் மீதும் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment