(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 6, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் 125 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 125 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.நடராஜன் தலைமை வகித்து பேசியதாவது:  ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் என 4 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 1307 வாக்குச் சாவடிகளில் 125 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணைய விதிகளின் படி பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க 12 பறக்கும்படைகளும், 12 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவை செயல்படும். ஒலி பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதிகாலை 6 மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 10 மணிக்கு பின்பாகவோ அனுமதியின்றி எவ்வித தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது. சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
 தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்துக்கோ, தேர்தல் பார்வையாளர்களுக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரிக்கோ தெரிவிக்கலாம் என்றார் அவர்.

கூட்டத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மணிவண்ணன், ஊரக வளர்ச்சித் திட்ட முகமை திட்ட அலுவலர் பழனி, கோட்டாட்சியர்கள் ராம்பிரதீபன் (ராமநாதபுரம்), சு.சமீரன் (பரமக்குடி) உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment