வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Sunday, March 13, 2016

புவனேஸ்வர் IIT ல் PhD படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு, கடைசி நாள் ஏப்ரல்-4!!

No comments :
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வர் ஐஐடி-யில் ஸ்கூல் ஆஃப் பேசிக் சயின்ஸஸ்எர்த்ஒஷன் அண்ட் கிளைமேட் சயின்ஸஸ்எலக்ட்ரிக்கல் சயின்ஸஸ்ஹியூமானிட்டீஸ்சோஷியல் சயின்ஸஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்இன்பிராஸ்டிரக்ச்சர்மெக்கானிக்கல் சயின்ஸஸ்மினரல்ஸ் போன்ற பிரிவுகளில் பிஎச்.டி. படிக்கலாம்.
இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் எம்.டெக், எம்.இ. படிப்புகளுக்கு 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு புவனேஸ்வர் ஐஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.iitbbs.ac.in -ல் காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 4ம் தேதி

மேலும் info@iitbbs.ac.in என்ற இ-மெயிலிலும் ஐஐடி-யைத் தொடர்புகொள்ளலாம்.
ஐஐடி-யின் தொலைபேசி எண் +91 674 - 2306 - 300 ஆகும்.


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும். பெண்களுக்குக் கட்டணம் கிடையாது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment