(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 13, 2016

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக கட்சிக்கு 3 தொகுதிகள்!!

No comments :
திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் படி அக்கட்சி தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இதில் மக்கள் தேமுதிக-வுக்கு ஈரோடு கிழக்குகும்மிடிப் பூண்டிமேட்டூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்த 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்திரகுமார், மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சி.எச்.சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து தங்கள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சந்திரகுமார் நன்றி தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment