Wednesday, May 18, 2016
மாவட்டத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை ராமநாதபுரம் அண்ணா கல்லூரியில் நடைபெற உள்ளது!!
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை, ராமநாதபுரம் அண்ணா கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.
ராமநாதபுரம்,
பரமக்குடி (தனி),
திருவாடானை,
முதுகுளத்தூர்
ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து ஆயிரத்து 194 பேர் உள்ளனர்.
இவர்களுக்காக 1307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில் மாவட்டம் முழுவதும் நான்கு தொகுதிகளிலும் 7 லட்சத்து 43 ஆயிரத்து 841 வாக்குகள் பதிவானது. வாக்கு சதவீததம் 67.61. ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நான்கு தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்கு பதிவு அலுவலர்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்தனர். பின்னர் மண்டல அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்தனர்.

நேற்று இரவு 9 மணியிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயந்திரங்களை எடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5 மணி வரை கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்திலும் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றி பெறப்போவ்கிறவர்கள் யார்? மாவட்டத்தில் அந்த நான்கு
MLA க்கள் யார்? என்பது நாளை தெரியவரும்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment