(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 31, 2016

ராமேஸ்வரம் - மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள்!!

No comments :
ராமேசுவரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. பயணிகளும், குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செந்தில்குமார், மதுரை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் பிரகாசம் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டேன்.எனது கோரிக்கையினை ஏற்று ராமேசுவரத்திலிருந்து காலை 5.30க்கு மதுரைக்கு புறப்படும்பயணிகள் ரயிலிலும், மதுரையிலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரயிலிலும் வியாழக்கிழமை முதல் கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

  
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment