(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 5, 2016

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 423 கான்கிரீட் குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் 167 கான்கிரீட் வீடுகளும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 256 கான்கிரீட் குடியிருப்புகளுமாக 423 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து மேலும் கூறியது:

ராமநாதபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் இந்திரா நகர் பகுதியில் 350.70லட்சம் மதிப்பில் 167 கான்கிரீட் குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பட்டினம் காத்தான் ஊராட்சிப் பகுதியில் 98,
பாம்பூரணியில் 76,
பெரியார் நகரில் 37,
மதுரைவீரன் சுவாமி கோயில் தெரு பகுதியில் 45 கான்கிரீட் வீடுகள் என 256 வீடுகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 423 கான்கிரீட் வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஆட்சேபகரமான அரசு நிலங்களில் (நீர்நிலைப் புறம்போக்குகள் உள்ளிட்ட பகுதிகளில்) வசித்து வரும் குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் 390 சதுர அடி பரப்பளவில் ரூ.8.25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு மானியமாகவும், 40சதவிகிதம் மாநில அரசு மானியமாகவும் வழங்கும். மீதம் உள்ள 10 சதவிகிதம் பயனாளிகள் பங்குத் தொகையாகும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தங்களது பங்குத்தொகையாக ரூ.82, 500-ஐ காலதாமதமின்றி செலுத்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணி உத்தரவுகளை வழங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன என ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.


ஆட்சியருடன் குடிசைமாற்று வாரிய மதுரைக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் ந.பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் அசோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் கோட்டாட்சியர்(பொறுப்பு)ராஜசேகரன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.முகம்மது சிராஜ் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment