Sunday, June 26, 2016
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் "செல் ஃபோன்”!!
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்க உள்ளதாக, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் சனிக்கிழமை
தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட
அரங்கில் ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில், அரசு நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் டாக்டர் முரு.
மணிகண்டன் 1,116
பயனாளிகளுக்கு ரூ. 79 லட்சம் மதிப்பிலான
பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதிபடி, 4 கிராம் தங்கம்
வழங்குவது இனிவரும் காலங்களில் 8 கிராம் தங்கமாக
உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசி
வழங்குவதற்கான் அரசு ஆணையும் முதல்வர் ஜெயலலிதாவால் பிறப்பிக்கப்பட உள்ளது. எனவே, அனைவருக்கும் விரைவில் செல்லிடப்பேசிகள் வழங்கப்படும்.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படுவது, 500 மதுக்கடைகளை
மூடுவது,
நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம்
வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோப்புகளிலும் முதல்வர் கையெழுத்திட்டார் என்றார்.
இந்த விழாவுக்கு, மக்களவை உறுப்பினர் அ.
அன்வர்ராஜா,
எம்.எல்.ஏ.க்கள் நடிகர் கருணாஸ், எஸ். முத்தையா,
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு. சுந்தரபாண்டியன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர்
மு. அலிஅக்பர் வரவேற்றார். இதில், சார்-ஆட்சியர் சு. சமீரன்
(பரமக்குடி),
கோட்டாட்சியர் ரா. ராம்பிரதீபன் (ராமநாதபுரம்), ராம்கோ துணைத் தலைவர் தஞ்சி. சுரேஷ், மாவட்ட திட்டக்குழு
உறுப்பினர் கே.சி. வரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (வளர்ச்சி) ஆ. செல்லத்துரை நன்றி கூறினார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment