(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 7, 2016

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிய கட்டிடம்!!

No comments :
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ரூ.5 கோடியில் புதிதாக புற நோயாளிகள் உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு உள்பட 7 வகையான சிகிச்சைகள் அளிக்கக்கூடிய கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.


ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த அதே நேரத்தில் புதிய கட்டடத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆட்சியர் இனிப்பு வழங்கினார்.

விழாவில் மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர்.சகாயஸ்டீபன்ராஜ், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர்கள் விநாயகமூர்த்தி, சாதிக்அலி, நகர்மன்ற தலைவர் எஸ்.கே.ஜி.சந்தானலெட்சுமி, பரமக்குடி பால்வளக் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.அங்குச்சாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,மருத்துவமனைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment