(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 18, 2016

ராமநாதபுரத்தில் சபாநாயகர் உருவபொம்மையை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

No comments :
தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்டு செய்ததை கண்டித்தும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக வெளியேற்றியதை கண்டித்தும் மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்படி ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரித்த தி.மு.க.வினர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி,வக்கீல் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் புகழேந்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அய்யனார், மாணவரணி துணை செயலாளர் கூரிதாஸ், விவசாய அணி துணைசெயலாளர் முஜிபுர்ராகுமான், அர்ச்சுனன், பூமிநாதன், இளைஞர்கள் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 

இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 22–ந் தேதி மாநில அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தபட உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுகூட்டம் நடத்த உள்ளதாகவும் மாவட்ட செயலாளர் திவாகரன் தெரிவித்தார். உருவபொம்மை எரித்ததாக மாவட்ட செயலாளர் திவாகரன் உள்பட 15 பேர்மீது ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment